பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

வாகைத்திணையின் பாகுபாடாவது :

66

என்பது.

'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும்

அனைநிலை வகையோ டாங்கெழு வகையான் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர்"

179

(தொல்.புறத்.16)

பண்டை யுலகில் மறம் சிறந்த குணமாகக் கருதப்பட்ட தாலும், பகையரசரைப் போராலடக்கினாலன்றிக் குடிகட்குப் பாதுகாப்பும் தொழில் நடைபேறு மின்மையானும், கலைகளை வளர்க்கும் அரசர் நூல்வாயிலாய்ப் புகழப்படற் குரியராதலானும், அரசர் தொழிலைத் தலைமைபற்றிச் சொல்லவே குடிகள் தொழிலும் ஒருவாறு அதனுள் அடங்குதலானும், போர்த்தொழில் பொருளிலக்கணத்திற் சிறப்பாய்க் கூறப்பட்டதென்க.

சான்றோன் என்னும் தமிழ்நாட்டு மறவர் பெயரையும் Knight என்னும் மேனாட்டு மறவர் பெயரையும் ஒப்புநோக்குக.

இதில் முக்கியமானவற்றைக் கூறி ஏனையவற்றை ‘அனை நிலை வகை யென்பதி லடக்கினார் தொல்காப்பியர். பண்டைத் தமிழாசிரியர் பலர் அறிவ(சித்த)ராயிருந்தமையின், அவரியற்றிய கலைநூல்களெல்லாம் 'அறிவன் தேயமாய்’ அடங்கும்.

செய்யுளிலக்கணம்:

செய்யுளுறுப்புகளில்

அடிப் படையானது அசை. மேலையாரிய மொழிகளிலெல்லாம், அசை வகுப்பு அசையழுத்தத்தைப் (Accentuation of syllables) பொறுத்தது. அங்கு அசைகள் எடுப்பசை (Arsis - accented syllable) படுப்பசை (Thesis-unaccented syllable) 67 607 இரண்டாக வகுக்கப்பெறும். வடமொழியில் லகு குரு என்னும் பாகுபாடும் இம் முறை யொட்டியதே. தமிழிலோ, ஆரிய மொழிகளிற்போல எளிய முறையில் ஒவ்வோ ருயிரெழுத்தாய்ப் பிரியாமல், எழுத்துகள்