பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

66

2

அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாய்க் கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ;

3

பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்

தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட் குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த் தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ;

அராகம்

183

'தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்; போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி; தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன துறை; மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கடிதொடர் புடையது கடல்;

நாற்சீரீரடி யம்போதரங்கம்

கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனா லிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றிசைத்திலமோ; கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகானி லிராவார லென்றிலமோ ;

நாற்சீ ரோரடி யம்போதரங்கம்

·

நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே; துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே; அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே; நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே;

முச்சீ ரோரடி யம்போதரங்கம்

அத்திறத்தா லசைந்தன தோள்; அலர்தற்கு மெலிந்தனகண்; பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த்தன

(முலை;