பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

185

தமிழ்ச்செய்யுள்கள் பா, பாவினம் என இருவகைப்படும். அவற்றுள்,பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு. பரிபாடல் கலியின் திரிபு. மருட்பா முதலிரு பாக்களின் கலவை. பாவினம், துறை, தாழிசை, மண்டிலம் என மூன்று. இவை ஒவ்வொரு பாவிற்கு முரியன. மண்டிலத்தைப் பிற்காலத்தார் விருத்தம் என்னும் வடசொல்லாற் குறித்ததுடன், வடமொழி யாப்பாகவுங் காட்டினர். இதன் விளக்கத்தைத் தமிழ்ப் பொழிலில் யான் வரைந்துள்ள 'பாவினம்' என்னுங் கட்டுரையிற் கண்டு கொள்க.

ஒரு மொழியின் வடிவம் உரைநடை, செய்யுள் என இரண்டு. அவற்றுள் செய்யுள் சிறந்தது. செய்யுளிற் சிறந்தவர் தமிழர். முற்காலத்தில் தமிழ்ப்புலவர் உரையாட்டெல்லாம் செய்யுளாகவே யிருந்தன. கலைகளெல்லாம் பெரும்பாலும் செய்யுளிலேயே எழுதப்பட்டன. அகராதி (நிகண்டு) கூடச் செய்யுளி லெழுதப்பட்டது. பல்வகைத் தொழிலாளரும் செய்யு ளியற்றுந் திறமையுடையவரா யிருந்தனர். முன்னைய பயிற்சியும் ஊக்கலுமிருப்பின், இக்காலத்தும் கடும்பாவலர் (ஆசுகவிஞர்) தோன்றலாம்.

செய்யுளைப் பிறமொழியாரெல்லாம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என அறுவகையாயே யாராய்ந்தார்; தமிழரோ இருபத்தாறு வகையா யாராய்ந்தார். அவ்வகையாவன:

"மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ

-

ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும்

S

=

நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.'

""

(1)

(தொல்.செய். 1)

(2)

"மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரை களைச் செய்யுள் விராய்க்கிடக்கும் அளவையென்ற வாறு....

எழுத்தியல்வகை யென்பது, மேற்கூறிய எழுத்துகளை இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு.

(3) அசைவகை யென்பது அசைக் கூறுபாடு; அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம்.