பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

ஒப்பியன் மொழிநூல்

தன்னுளடக்கிய வெளியும் பிற்காலத்தில் அண்டமெனப்பட்டது, எப்புறமும் வளைந்து தோன்றுதலின்.

அம்பு, ஆழி என்னும் கடற்பெயர்கள் வட்டம் என்னும் பொருள் பண்டைத்தமிழரின் வாரித்துறைத் தேர்ச்சியைக்

பெற்றதும், காட்டுவதாகும்.

அம்,ஆம், அம்பு என்பன நீரைக் குறிக்கும் தனித்தமிழ்ப் பெயர்கள். அம் - அம்பு. ஒ.நோ: கும்-கும்பு, திரும்-திரும்பு.

அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என் று வலிக்கும், ம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல, தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு -கப்பு, கொம்பு- கொப்பு.

ஆழ்ந்திருப்பது ஆழி. வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச் சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன.

அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு = வளையல். அம்பி- ஆம்பி = காளான். L. amb, ambi, Gk. ambhi, round.

மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த கே(Ke)த் தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.32 உலகத்திலேயே முதன்முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத்தக்கதா யிருக்கின்றது.

66

'உழவு தொழிலே வரைவு வாணிபம்

வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில் கற்கும் நடையது கரும பூமி”

என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே.

32 The Malay Archipelago, pp. 321 - 2.