பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

66

‘வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை "

41

(6ng, 73)

என்னும் நூற்பாவில், வைசியன் என்னும் வடசொல் வந்திருப்பது, அது ஆரியமுறை என்பதற்குச் சான்றாகாது. நூலைச் சூத்திர மென்றும், நினைவை ஞாபகம் என்றும், சிலவிடத்து மொழி பெயர்த்து ஆரியச்சொல்லாற் கூறுவது தொல்காப்பியர் வழக்கம். பழமலை (அல்லது முதுகுன்றம்) என்னும் பெயரை விருத்தாசலம் என்றும், வட்டு (வட்டமான கருப்புக்கட்டி) என்னும் பெயரைச் சக்கரை(சக்கரம்)யென்றும் மொழிபெயர்த்ததினால், விருத்தாசலம் ஆரிய நகரமென்றும், வட்டுக் காய்ச்சுந்தொழில் ஆரியருடைய தென்றும் ஆகாதது போல, வைசியன் என்னும் வடமொழிப் பெயரினாலும், தமிழ வணிகக்குலம் ஆரிய வைசியக்குலமாகி விடாது.

முனிவரைக் கடவுள 19ரென்றும், பகவரென்றும், கடவுளோ டொப்பக்4 கூறுவது பண்டைத் தமிழர் வழக்கம். பார்ப்பனர் தங்களை அந்தணராகக் காட்டிக்கொண்டபின், தமிழர் தங்களைச் சாமி என்று கடவுட்பெயரால் அழைக்குமாறு செய்துவிட்டனர். அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது.

தமிழகத்தில் இருசார் பார்ப்பனர்

தமிழகத்தில் உள்ள பார்ப்பனர் தொன்றுதொட்டு இரு சாரார் ஆவர். அவருள் ஒரு சாரார் தமிழை வளர்த்தோர்; அவர் அகத்தியர், தொல்காப்பியர் முதலானோர். மற்றொரு சாரார் தமிழைக் கெடுத்தோர். இவருட் பிந்தின சாராரே வரவர மலிந்துவிட்டனர். முந்தின சாரார், பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியாருக்குப் பின், விரல்வைத்தெண்ணு மளவு மிகச் சிலரேயாவர். வடநாட்டினின்றும் பிந்தி வந்த பிராமணர் முந்திவந்தவரை மிகக் கெடுத்துவிட்டனர்.

தமிழையும் தமிழரையும் கெடுத்தோருள் பலர், பாட்டும் நூலும் உரையும் இயற்றியிருத்தலால், தமிழை வளர்த்தார்போலத் தோன்றுவர். ஆனால் அவர் வருவாய்ப்

ஆராயின்,

12 "தொன்முது கடவுட் பின்னர் மேக” (மதுரைக். 41)

13 பகவரைக் காணின் (திருவாய்.)

14

பொருட்டும்,

இக்காலத்தும், 'His Holiness' என்று போப்பையும், 'His Grace' என்று அரசக் கண்காணியாரையும் மேனாட்டாரும் அழைத்துவருதல் தமிழக வழக்கத்துடன் ஒப்பிடத்தக்கது.