பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

51

தலைமுறையிலேயே குலக் கல்வித்திறமை பிறப்பிலமைகின்றது. அங்ஙனமாயின், 5000 ஆண்டுகட்கு அத் திறமை எவ்வளவு பெருகியிருக்கவேண்டும்? தமிழரோ, சென்ற 2000 ஆண்டு களாக

ரிய வரணவொழுக்கத்தால் தாழ்த்தப்பட்டு உயர்தரக் கல்வியை இழந்தவர்கள். ஆங்கிலேயர் வந்த பிறகே, ஆங்கிலத்தின் மூலமாய்க் கண்திறக்கப்பட்டுச் சென்ற இரண்டொரு நூற்றாண்டு களாக உயர்தரக் கல்வி கற்று வருகின்றனர். அதற்குள் எவ்வளவோ முன்னேற்ற மடைந்துவிட்டனர். இன்னும் இரண்டொரு நூற்றாண்டுகள் தொடர்ந்து கற்பின் தமிழர் தம் முன்னோரின் நுண்ணறிவைப் பெறுவது திண்ணம். எந்தக் குலத்தையும் தலைமுறைக் கல்வியால் அறிவிற் சிறந்த தாக்கலாம். கல்வி ஒருவரின் அல்லது குலத்தாரின் பங்கன்று.

தமிழர் உயர்தரக் கல்வியிழந்ததைப் பின்வரும் குறிப்பால் அறிக.

"1610ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் நாள் ராபர்ட் டீ நொபிலி (Robert de Nobili) எழுதிய கடிதம் நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது. 'மதுரையில், 10,000 மாணவர்க்குமேல் இருக்கின்றனர். அவர்கள் பல வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 300 வரையுளது. அவர்களெல்லாரும் பிராமணர்களே; ஏனென்றால், உயர்தரக் கலைகளைக் கற்க அவர்களுக்குத்தான் உரிமையுண்டு. ...மாணவரே தங்கள் ஊணுடைகளைத் தேடிக்கொள்வதாயிருந்தால். அவர்கள் படிப்புக் கெடுமென்று பிசுநகரும் பெரிய நாயக்கரும் சிறந்த மானியங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவற்றின் வருவாய் ஆசிரியன்மார் சம்பளத்திற்கும், மாணாக்கர் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமானது

23

இங்ஙனம், தமிழ்நாட்டில், ஆரியக்கலை செழிக்கவும் தமிழ்க்கலை

66

....சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்

இடமிருந்தே குற்றேவல் செய்தோ மில்லை

என்னசென்மம் எடுத்துலகில் இருக்கின் றோமே

என்று புலவர் வருந்துமாறு வறண்டது.

""

23 History of the Nayaks of Madura, p. 257.