பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

ஒப்பியன் மொழிநூல்

இதற்கு இருவகையாய்க் காரணங் கூறலாம்.

(1) ஈர்தல் அறுத்தல். இரு துண்டாக ஈர்ப்பது, இரண்டு.

ஈருள் = ஈர்தல், ஈருள் - (இருள்) - (இரள்).

(2) இருமை = கருமை, இருள்.

இரா, இருள்,இருட்டு, இரும்பு, இருந்தை, இறடி முதலிய சொற்களிலெல்லாம், இர் என்னும் வேர் கருமை குறித்தல் காண்க. இர் - எர் - என் - ஏன். கா : எருமை, ஏனம்.

இருள் அகவிருள் புறவிருள் என இரண்டாதலின், இரண்டாம் எண் இருமை யெனப்பட்டது.

ங்ஙனம் கூறுவது பொருட்டொகை (பூதசங்கியை) முறையாகும். ஒன்பதுவரை ஏனை யெண்களும் யெண்களும் இம் முறை பற்றியவையே.

மூன்று : மூ

=

மூக்கு. மூக்கின் பக்கங்கள் மூன்றாயிருத்தல் காண்க. மூன்று என்னும் வடிவம் ஒன்று என்பதனுடன் எதுகை நோக்கியது.

-

-

நான்கு : நாலம் -நாலு-நாலுகு நால்கு நான்கு.

நாலம் -ஞாலம் (பூமி) ந - ஞ, போலி.

லகத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வந்ததின் காரணம் முன்னர்க் கூறப்பட்டது. நாலம் என்னும் உலகப்பெயர் அதன் பகுதியையும் குறிக்கும். "மைவரை யுலகம்", தமிழுலகம் என்னும் வழக்குகளை நோக்குக உலகம் இயற்கையில் நால்வகையா யிருத்தலின், நாலம் என்னும் பெயர் நான்காம் எண்ணைக் குறித்தது. உலகம் நானிலம் எனப்படுவதையும் நோக்குக.

-

ஐந்து : கை ஐ. ஐ +து = ஐது -ஐந்து.

ஒரு கையின் விரல்கள் ஐந்து.

பொருள் விற்பனையில் கை என்னும் சொல் ஐந்து என்னும் பொருளில் இன்றும் வழங்குகின்றது.

2.

ஆ : இதன் வரலாறு தெளிவாய்ப் புலப்படவில்லை.'

ஆ - முற்செலற் கருத்து. ஆதலை முன்வரிசை (க.). ஆதிகேசவலு முற்படு (தெ.) ஆகே முன்னால் (இ.)-இரா.மதிவாணன்