பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

ஒப்பியன் மொழிநூல்

பண்டைத்தமிழர் வானூல் வல்லோராயிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர் நாளின் (நாண்மீனின்) பெயரால் ஒரு கிழமையளவையும், எழுகோள்களின் பெயர்களால் ஒரு வார அளவையும், மதியின் பெயரால் ஒரு மாதவளவையும், சூரியன் பெயரால் ஓர் ஆண்டளவையும் குறித்திருத்தலே, அவரது வானூலறிவிற்குச் சிறந்த சான்றாம். இவ் வளவுகள் முதன்முதற் குமரிநாட்டிலேயே தோன்றியவை.

ங்கிலத்தில் உள்ள வாரநாட் பெயர்களில், Sunday, Monday, தமிழ்ப்பெயர்களின்

Tuesday, Saturday என்னும் மொழிபெயர்ப்பா யிருக்கின்றன.

நான்கும்

Tues என்பது Zeus என்பதின் மறுவடிவமாகக் கூறப்படு கிறது. இவை முறையே செவ்வாய் சேயோன் என்னும் பெயர் களைச் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றன. Zues கிரேக்கப் பெருந்தெய்வம். கிரேக்கர் தமிழ்நாட்டில் மிகப்பழங் காலத்திலேயே குடியிருந்தனர். அவரை யவனர் என்று தமிழ் நூல்கள் கூறும். யவனம் என்பது கிரேக்க நாட்டின் பெயர்களுள் ஒன்று. பாண்டியனுக்கும் கிரேக்க மன்னருக்கும் கயல்மீன் சின்னமாயிருந் ததும், தமிழருக்கும் கிரேக்கருக்கும் பல பழக்கவழக்கங்கள் பொதுவாயிருந்ததும் இங்குக் கவனிக்கத்தக்கன.

இலத்தீனில் வழங்கிய பன்னீர் ஒரைப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவே யிருக்கின்றன.

I. Aries (ram), ii. Taurus (bull), iii. Gemini (twins), iv. Cancer (crab), v. Leo (lion), vi. Virgo (virgin), vii. Libra (balance), viii. Scorpio (scorpion), ix. Sagit- tarius (archer or bow), x. Capricorn (the goat horned = xi. Aquarius (water-bearer= pitcher) xii. Pisces (fish) .

(12) தமிழில் முதல் வேற்றுமைக் குருபின்மை.

-

shark),

(13) தமிழ் வேற்றுமை யுருபுகளெல்லாம் பின்னொட்டுச் சொற்களாயிருத்தல்.

(14) சொற்றொடரில் தமிழ்ச்சொன்முறை இயல்பாயிருத்தல்.

பன்னிரண்டு என்னும் சொன்முறை பத்தோடு இரண்டு சேர்ந்தது என்பதைக் குறிப்பதாகும். வடமொழியில் த்வாதசம் என்னும் முறை இயற்கைக்கு மாறானதாகும்.

(15) தமிழ் உலக முதன்மொழி ஆய்வுக்கு நிற்றல்.