பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

வேர்ச்சொற் கட்டுரைகள்

முகவுரை

மொழிகள், இயன்மொழி (Primitive Language,) திரிமொழி (Derivative Language) என இருவகைப்படும். வளர்ச்சியடைந்த ஒவ்வோர் இயன்மொழியும், இயற்கைமொழி (Natural Language), வளர்ச்சி மொழி (Developed Language or Articulate Speech) என இரு நிலைகளையுடையது.

வளர்ச்சிநிலையடைந்த இயன்மொழிகளும் அவற்றினின்று திரிந்த திரிமொழிகளும் பெரும்பாலும், வேர் (Root), அடி (Stem), முதனிலை (theme) என்னும் மூவகை மூலச்சொற்களையும் அவற்றினின்று திரிந்த பல்வகைத் திரிவுச் சொற்களையுமே கொண்டுள்ளன.

-

எ டு: வேர் - திரிவு

அடி- திரிவு

முதனிலை - திரிவு

குல் - குலம்

குழு - குழாம்

குழுவு - குழுவல்

குல் - குலை

குழு - குழம்பு

குழும - குழுமல்

குழு - குழும்பு

குல்லுதல் = கூடுதல், குலம்ம

= கூட்டம்.

வேரின் வளர்ச்சியே அடியும், அடியின் வளர்ச்சியே

முதனிலையும் ஆகும்.

எ - டு : குல் - குழு - குழுவு (குழுமு)

பல அடிகட்கு வேரும், பல முதனிலைகட்கு அடியும் வேரும், மறைந்திருக்கும் அல்லது இறந்துபட்டிருக்கும்.

வேருக்கு மூலமுளையும் உண்டு.

எ -டு : உல் (முளை) - குல் (வேர்). முளைக்கு மூலமான விதையும் உண்டு.

எ - டு : உ (விதை) - உல் (முளை).