பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii

வேர்ச்சொற் கட்டுரைகள்

கலாம் கலாபனை கலுழ் கலாய்

கலிழ்

இருபாற் கலப்பே கலவி, பலர் கலந்து பொருதலே கலகம். கைகலத்தல் என்னும் வழக்கை நோக்குக. நீரும் சேறும் போல வெவ்வேறு பொருள் கலப்பது கலக்கம். இது பொருட்கலக்கம். பல்வேறு கருத்துகள் அல்லது நினைவுகள் கலந்து, மனத்தை வருத்துவது அல்லது குழப்புவது மனக்கலக்கம். இங்ஙனம் கலக்கம் ருவகைத்து.

வெண்மையும் செம்மையும் கலந்த பறவையைக் குறிக்கும் கலுழன் என்னும் சொல், நிறக்கலப்புப் பற்றியது. கலுழ் - கலுழன் கலுழ்தல் கலத்தல். கலுழன் - வ. கருட (ப)

கூடுதல் பொருந்துதல், ஒத்தல், கலத்தல், போரிடுதல் என்பன தொடர்புடைய கருத்துகள்.

ஒ.நோ: பொருதல் = பொருந்துதல், ஒத்தல், போர் செய்தல். வேறுபட்ட பல்பொருள் கலக்கும் போது கலக்கம் உண்டாவதால், கலப்புக் கருத்திற் கலக்கக் கருத்துத் தோன்றும்.

ஒ.நோ

=

கலக்கம், மயக்கம்.

மயங்குதல்

குழம்புதல்

=

=

கலத்தல், மயங்குதல், குழப்பம்

கலத்தல், கலங்குதல், மயக்கம் = கலப்பு,

கலக்கம், உணர்விழிப்பு.

ஒத்தல் என்பது, இருபொருள் அல்லது பல்பொருள் இயலிலும் செயலிலும் பொருந்தி நிற்றல்.

இங்ஙனம், ஒரு கருத்தினின்று மற்றொரு கருத்துத் தோன்றும் போது, ஒரு சொல்லினின்று மற்றொரு சொற் பிறக்க இடமுண்டா கின்றது. கருத்து வேறுபடும் போது சொல்லும் வேறுபடல் வேண்டும். அன்றேல், பொருண்மயக்கம் உண்டாவதோடு மொழியும் வளர்ச்சி யுறாது. இதுவே சொல்லாக்க அடிப்படை நெறிமுறை.

உலக மொழிகள் மூவாயிரத்துள்ளும் வேர்ச்சொல் காண்பதற்கு எளிதாகவும் மிகுதியாகவும் இடந்தரும் மொழி தமிழ் ஒன்றே. அஃது