பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xvi

வேர்ச்சொற் கட்டுரைகள்

"வேர்ச்சொற் கட்டுரைகள்” தொடருக்காக பாவாணர் எழுதிய சிறப்பு முன்னுரை

ஆறறிவு படைத்த மக்களினத்திற்குப் பல்துறைப்பட்ட கல்வியறிவு, முன்னேற்றத்திற்கு மட்டுமன்றி வாழ்க்கைக்கும் இன்றி யமையாதது. அவ்வறிவை அடையும் வாயில் மொழியே.

மாந்தன் மற்ற இருதிணைப் பொருள்களைப் பற்றிக் கற்றறிவது போன்றே, தன்னையும் பற்றிக் கற்றறிதல் வேண்டும். “தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான்” என்பது பழமொழி.மாந்தன் நாகரிகம் கூட்டுறவினின்று தொடங்கியதனால், அக்கூட்டுறவிற்குத் துணையானமொழியையுங் கற்றல் வேண்டும்.

மக்கள் பல்வேறினமாய்ப் பரவிக்கிடப்பதாலும், அவ்வினப் பிரிவிற்கு மொழியே அடிப்படையாயிருப்பதனாலும், ஒவ்வோர் இன முன்னேற்றத்திற்கும் ஒவ்வொரு மொழியே துணையா யிருப்பதனாலும், அம்மொழியைக் கற்றல் இன்றியமையாததாம்.

சில இனத்தார்க்குத் தன் மொழித்துணை போதும். பல இனத்தார்க்குத் தன்மொழித்துணையோடு பன்மொழித்துணையும் வேண்டும்.அத்தகையோர் தன்மொழியை முந்திக் கற்றல் வேண்டும்.

மொழியை வரலாற்றோடு சேர்த்துக் கற்பதே சிறந்த முறையாம்.வரலாற்றிற்கு வேர்ச்சொல்லறிவு இன்றியமையாததாம். ஆங்கிலத்திற்போல் வேர்ச்சொல் அகர முதலில் இதுவரை தமிழில் அமையவில்லை. அக்குறையை நீக்குதற்கெழுந்த கட்டுரைத் தொடரின் முகம் இதுவாகும்.

ஆரிய மொழிகளெல்லாம் தமிழுக்குப் பிற்பட்டனவும், மிகத் திரிபுடையனவும், மூலமொழியினின்று சேணெடுந் தொலைவு பிரிந்து போனவும், பழஞ்சொற்களுட் பலவற்றை இழந்தனவுமா யிருத்தலின்; அவற்றிலுள்ள வேர்ச்சொற்கள் பெரும்பாலும் தொடர்பற்றனவும், கான்முளைச் சொல்வளம்