பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

M. amiluka (அமிழுக).

வேர்ச்சொற் கட்டுரைகள்

அமிழ் - ஆழ் - ஆழம் ஆழ்-ஆழி.

அமிழ்- அமிழ்த்து- ஆழ்த்து - M. amilttuka (அமிழ்த்துக).

ஆழ்- அழுந்து - அழுத்து அழுத்தம்.

அழுத்து- அழுத்தி.

அம் - அமை

அமைதல் =(1a) நெருங்குதல், கூடுதல்.

ம- வ, போலி. அமை- அவை = கூட்டம். கழகம்.

ஒ.நோ : அம்மை - அவ்வை, குமி- குவி.

அமை, அவை என்பன முதனிலைத் தொழிலாகுபெயர்.

இமை, சுவை என்பன முதனிலைத் தொழிலாகு பெயராயிருத்தலை நோக்குக.

அவை - அவையம்- பேரவை.

‘அம்' ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டு.

ஒ. நோ : மதி - மதியம் (முழுமதி), நிலை- நிலையம், விளக்கு-

விளக்கம்.

அவை- சவை- sabha (S).

ஒ.நோ: இளை- சிளை, ஏமம் - சேமம்.

“அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்”

(925)

“அவையடக் கியலே அரில்தபத் தெரியின்”

(1370)

என்று தொல்காப்பியத்திலும்,

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து”

என்று தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்திலும், அவை, அவையம் என்னும் இருவடிவுச் சொற்களும் வந்திருத்தல் காண்க.

குறிப்பு : இக் கட்டுரையில் ‘அம்முதல்' என்ற சொல்லுக்குரிய பொருளுக்கு க, உ என்னுந் தமிழ் எண்களும், 'அமைதல்' என்ற சொல்லுக்குரிய பொருளுக்கு வளைவுக் குறிக்குள்() எண்களும், ‘அமர்தல்’ என்ற சொல்லுக்குரிய பொருளுக்குக் குறியில்லாத எண்களும், ‘அம்’ என்ற சொல்லுக்குரிய பொருளுக்குப் பகரக் ழு 2 குறிக்குள் எண்களும் தெரியும் பொருட்டுக்

கொடுக்கப்பெற்றிருக்கின்றன.

தொடர்பு