பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஊர்தேடு. 230). 5. கிளைதறித்தல். 6. வெட்டுதல். "தாளும் தோளும் அரக்கி” (விநாயகபு. 42: 4). 7. குறைத்தல். “காரரக்கும் கடல்” (தேவா. 46 : 8). 8. முழுதுமுண்ணுதல்.

அரக்கு- அரக்கன் = அழிப்பவன்.

அரப்பு = அழுக்குத் தேய்க்கும் கட்டி அல்லது தூள்.

அரம்பு = குறும்பு. அரம்பன் = குறும்பன்.

அரமகள் = வருத்தும் பெண்தெய்வம், தேவமகள்.

ஒ.நோ: அணங்கு = வருத்தும் பெண்தெய்வம், தேவமகள்.

அரம்பையர் = தேவமகளிர்.

"அரம்பையர்ச் சேருவ ரன்றே”

(நைடத. நிலா.13)

அரளுதல் = அஞ்சுதல்.

அரள் - அரட்டு - அரட்டன் = துன்புறுத்துவோன், துன்புறுத்தும் குறுநில மன்னன்.

அரட்டமுக்கி = துன்புறுத்தும் குறுநில மன்னனை அடக்கும்

செங்கோலரசன்.

அரற்றுதல் = துன்பத்திற் கதறுதல்.

அர் - அரி.

அரிதல் = பொடியாய் நறுக்குதல் அல்லது சிறிய பொருளை அறுத்தல்.

அரிதாள் = கதிரறுத்த நெல்தாள்.

அரிவி - இருவி = அரிதாள்.

அரிவாள்- சிறிதாய் அறுக்கும் வாள்வகை.

அரிவாள்மணை = அரிவாள் பதித்த பலகை அல்லது கட்டை.

அரிவாள்முனைப் பூண்டு - அரிவாள் முனையிலுள்ள தேங்காய் திருகிபோன்ற இலையுள்ள பூண்டு.

அரித்தல் = 1. அரித்தொழுகுதல். 2. சிறிது சிறிதாய்க் கறையான் (சிதல்) போல் அறுத்தல். 3. தினவெடுத்தல், புல்லரித்தல், நுண்ணியதாய் வலித்தல். 4. வெட்டுதல். 5. அழித்தல்.

கோடரி = கிளையை வெட்டும் வாள். Skt. kuthara,

கோடரி- கோடாரி-கோடாலி.

அரி, அரிமா = பிற வுயிரினங்களை அழிக்கும் விலங்கு.