பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

வேர்ச்சொற் கட்டுரைகள்

3) வெட்டறுவாள்

கடா கிளை முதலியவற்றை வெட்டுவது வெட் டறுவாள்.

4) கொத்தறுவாள்

இஃது ஆட்டுக்கறியை அறுப்பதற்கும் கொத்து வதற்கும் பயன்படுவது.

5) வீச்சறுவாள்

இது வீசிப் பகைவரைக் கொல்வதற்கு உதவுவது.

இங்ஙனம் பல்வேறு அறுவாள்கள் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரவும், அவற்றுள் ஒன்றைக்கூட அறுவாள் எனக் குறியாது எல்லாவற்றையும் அரிவாள் என்றே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி குறித்திருப்பது வருந்தத்தக்கது.