இல்' என்னும் வேர்ச்சொல் ளங்கலையன் = நெல்வகை.
இளங்கருக்கு = சிறிது காய்ச்சிய கருக்கு (கஷாயம்)
=
இளங்காட்டுத் தரிசு = பத்தாண்டுப் புறம்போக்கு.
ளங்கார் = நெல்வகை.
இளங்கால் = தென்றல், வெற்றிலை யிளங்கொடி, இளமைப் பருவம்.
இளங்காலை = வைகறை, இளமைப்பருவம்.
ளங்குரல் = குழந்தையின் குரல்.
இளங்குழம்பு = திண்ணமில்லாத சாறு, ஒருவகைக் குழம்பு.
இளங்கொடி = ஆவின் நஞ்சுக்கொடி, இளம்பெண்.
இளங்கோயில்
=
19
பழங்கோயில் பழுதுபார்க்கப்படும் பொழுது
கட்டப்பெறும் குறுங்காலக் கோயில்.
இளஞ்சாயம் = சிறிது தோய்த்த சாயம்.
இளஞ்சார்வு - குருத்தோலை (யாழ்).
ளஞ்சிவப்பு = வெளிறிய சிவப்பு.
இளஞ்சூடு = சிறிது சுடுகை.
இளஞ்சூல் = முதிராக் கரு.
இளந்தண்டு = முளைக்கீரை.
இளந்தெய்வம் = சிறு தெய்வம்.
இளந்தோய்ச்சல் = தயிர் சிறிது திரைதல், அலகைச் சிறிது பதப் படுத்துதல். இளநகை = புன்சிரிப்பு, க. elanage
இளநாக்கடித்தல் = உடன்பாடின்மைபோற் காட்டுதல்.
இளநிலா = அந்தி நிலா.
இளநீர் = முற்றாத தேங்காய்நீர், மணியின் இளநிறம். T. edaniru, K.elaniru, ம.இளநீர்.
இளநீர்க்கட்டு = உண்ணாக்கு நோய் (tonsillitis)
இளநீலம் = வெளிறிய நீலம்.
இளநெஞ்சு = இரக்கமுள்ள மனம்.
இளம்பசி = சிறுபசி.