பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இல்' என்னும் வேர்ச்சொல்

ளையவன் = அகவையிற் குறைந்தவன், தம்பி. ளையவள் = திருமகள்.

=

இளையன் = தம்பி.

ளையாள் = தங்கை, திருமகள், பின்முறை மனைவி.

இள் = எள்.

எள்ளல் = குறைவாய் மதித்தல், இகழ்தல்.

21

எள் = 1. மிகச் சிறு கூல வகை. 2. ஒரு சிற்றளவு (8 கடுகு). க., ம. எள்.து. எண்மெ.

எள் - எண் = எள்.

6

“எண்ணெ ணுணவுப்பெயர்”

(தொல்.எழுத்து. 308)

எண்மை = எளிமை.

எள்ள = இகழ, ஓர் உவமவுருபு.

“எள்ள விழைய இறப்ப நிகர்ப்ப"

(தொல்.உவ.11)

எள் - எள்கு. எள்குதல் = 1. இகழ்தல். “எள்கலின்றி... ஈசனை வழிபாடு செய்வாள்” (தேவா. 1049 : 10). 2. கூசுதல், ஒடுங்குதல். "பழிவந்து மூடுமென் றெள்குதுமே." (திருக்கோ. 92). 3. அஞ்சுதல். "எண்டிசை யோரும் எள்க” (சீவக. 1749). 4. வருந்துதல். "செங்களம் பற்றிநின் றெள்கும் புன்மாலை” (திவ்.இயற். திருவிருத். 77).

எள்கு- எஃகு, எஃகுதல் = நெகிழ்தல், அவிழ்தல், உருகுதல்.

-

எஃகு- உருக்கு, உருக்கினாற் செய்யப்படும் படைக்கலப் பொது. ஒ.நோ : இள- இளகு.

எஃகுபடுதல் = இளகினநிலை யடைதல்.

"உருகக் காய்ச்சியெறிதற்கு எஃகுபட்டிருக்கும் உலையினையும்”

(சிலப். 15:210, உரை)

எள்- எளி. எளிதல் = எளிமையடைதல்.

"பொருதிறல் வன்மைய திலனா யெளிந்தான்”

(கந்த பு. அக்கினிமுகா.90)

அளித்தல் = தாழ்த்திக் கூறுதல்.

“எளித்தல் ஏத்தல்'

(தொல்.பொருள். 207)