பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




‘இல்’ என்னும் வேர்ச்சொல்

23

செந்தடிக்கே யேட்டைப் பட்டு” (சீவக.1552). இன்மை = வறுமை, குறைவு, இல்லாமை.

Cf. E. less, deficient, minus.

வளங்குன்றிய நாடு, செயப்படுபொருள் குன்றிய வினை என்னும் தொடர்ப்பொருள்களையும் ஒப்புநோக்கி யுணர்க.

இல் = இல்லை. இல்- இல்லை. இல், இல்லை என்பன, உள்உண்டு என்னும் வினைகட்கு எதிர்மறையாம். உள் என்னும் வினை மலையாளப் பழமொழிகளில் இன்றும் வழங்குகின்றது.