பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுல்' (குத்தற் கருத்துவேர்)

சுண்டு - சுண்டி = சுக்கு. சுண்டி டி = சுக்கு. சுண்டி - வ. சுண்ட்டி.

3. வெறிவேகம்

91

சுடு-சுடிகை = கள். சுண்டு - சுண்டம் = கள் (மூ. அ.). சுண்டை =

கள்.வ.சுண்டா.

சுண்டியுண்டை = சதுரக்கள்ளி, சித்திரகம், கொஞ்சி ஆகிய வற்றின் வேர்ப்பட்டையாலும் சீரகத்தாலும் செய்து, சோற்றைப் புளிக்க வைப்பதற்குப் பயன்படுத்துங் குளிகை. சுண்டுசோறு = வெறிப்புளிப் பேற்றிய சேறு.

4. சுருங்கல்

வெயிலாலும் நெருப்பாலும் நீர் வற்றுவதாலும், காய்ந்த பொருள் வடிவிற் சுருங்குவதாலும் சூட்டுக் கருத்தில் சுருங்கற் கருத்துத் தோன்றிற்று. தொட்டால் வாடி (தொட்டாற்சுருங்கி, தொட்டாற்

சுண்டி

=

சிணுங்கி). சுண்டி - சுண்டில் = தொட்டால் வாடி (மலை.).

சுட்கு - சுட்கம் = கஞ்சத்தனம். (ஈகை அல்லது செலவுச் சுருக்கம்). சுக்குச் செட்டு = கஞ்சத்தனம். கஞ்சனைச் சுக்குச் செட்டி, சுக்கஞ்செட்டி, சுக்காஞ்செட்டி என்று சொல்வது உலக வழக்கு.

சும்பு - சம்பு. சம்புதல் = விலை குறைதல். சம்பு - சம்பல் = 1. விலையிறக்கம். 2. மலிவு.

சுணங்கு = மெலிவு.

5. சோம்பல்

சுணங்குதல் = 1. வினையிற் சோர்தல். 2. காலந்தாழ்த்தல். சுணக்கம் = 1. மனத்தளர்ச்சி. 2. காலத்தாழ்ப்பு.

சும்பு - சூம்பு. சூம்படைதல்

வழக்கு).

=

சோம்பற்படுதல் (நெல்லை

சூம்பு- சோம்பு. சோம்புதல் = 1. வினைமடிந் திருத்தல். "சோம்பி யிருந்ததக் குரங்கு மென்றார்” (கம்பரா. சுந்தர. பஞ்சசே. 67). 2. மதிமந்தமாதல். 3. திடாரிக்கங் குறைதல். “சூல மன்னதோர் வாளியாற் சோம்பினன் சாம்பன்' (கம்பரா. யுத். முதற்போர். 199). 4. வாடுதல். 5. கெடுதல். “அரிவையர் கற்புச் சோம்பி” (கலிங். 247). 6. பின்வாங்குதல். ஒரு காசுக்குச் சோம்புவான் என்பது உலக வழக்கு.