பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சுல்3 (சிவத்தற் கருத்துவேர்)

சுல் - சுல்லி = 1. அடுப்பு. 2. மடைப்பள்ளி, சுல் - சுள். சுள்ளல் சுடுதல், காய்தல்.

சுல் - சுல்லம் = செம்பு (மலை.). சுல்லம் - வ. சுல்ல.

சுல்

=

சுல்வு - சுல்வம் = செம்பு. “சுல்வத்தா லமைத்த நெடுங் களத்தின்” (சேதுபு. தனுக்கோ. 9). சுல்வம் - வ. சுல்வ.

நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்புக் கருத்தினின்று சிவத்தற் கருத்துத் தோன்றிற்று.

ஒ.நோ : எரி = நெருப்பு, சிவப்பு. எரிமலர் = 1. சிவந்த முருக்கமலர். 2. செந்தாமரை.

செம்பு செந்நிற மாழை (உலோகம்). அதனால் அப் பெயர்பெற்றது. சூல்-செல்-சேல் = செந்நிறக் கெண்டைமீன்.

சேல்விழி = சேல்மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண். “சேலுண்ட வொண்க ணாரிற் றிரிகின்ற செங்காலன்னம்” (கம்பரா. நாட்டுப்.13).

=

செல்- செள்- செட்டு - செட்டி 1. சிவந்த அடியையுடைய வெட்சிச் செடி. “செங்கால் வெட்சி" (திருமுருகு. 21). 2. சேயோன் (செந்நிற முருகன்).

செட்டு - செச்சு - செச்சை = 1. சிவப்பு. "செச்சைவாய் திறந்து” (திருவிளை. வலை. 24). 2. வெட்சி. “செச்சைக் கண்ணியன்” (திருமுருகு. 208). 3. செந்துளசி (மலை.).

செச்சு

செஞ்சு = செம்மை, செவ்வை, நிறைவு. “செஞ்சுறு

செஞ்சுடர்” (திருமந். 1713).