பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

சுல்* (சிவத்தற் கருத்துவேர்)

101

சிவனியம், மாலியம் ஆகிய இரு தமிழ் மதங்களையும் ஆரியப்படுத்தற் பொருட்டு, ஆரியர் வகுத்த முத்திருமேனிக் கூட்டில், முத்தொழில் தலைவனாகிய சிவனுக்கு அமங்கலமான அழிப்புத் தொழிலே ஒதுக்கப்பட்டதுபற்றி, சிவனியத் தமிழர்க்குள்ள மனத் தாங்கலைத் தீர்த்தற்கே, சிவன் என்னும் சொற்கு நன்மை செய்பவன் என்று பொருள்கூறி, சிவனுக்குச் சங்கரன் (சம் + கர = சங்கர = நன்மை செய்பவன்) என்றொரு பெயரையும் அமைத்தனர் என அறிக.