பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

சுல்' (வளைதற் கருத்துவேர்)

-

=

113

சுருளை சுருணை 1. இலைச்சுருள். 2. கணக்கெழுதிய ஓலைச்சுருள். (திவ். பெரியாழ். 5:2:2. வியா). 3. வீணைக் கம்பிச் சுருள். 4. சாணித் துணிச்சுருள். 5. தீப்பந்தத் துணிச்சுருள். “நெருப்பானது சுருணையை வேவப் பண்ணி" (ஈடு. 5: 4: 6). 6. பூண். “கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்' (அகம்.

7. கட்டட வளைவுவகை. (W.). ம. சுருண. க. சுருளெ.

113).

சுருள் - சுருட்டு 1. சுருட்டுகை. 2. சுருட்டிய பொருள். 3. புகையிலைச் சுருட்டு. 4. சுருட்டுப் பட்டு (உயர்ந்த பட்டுவகை). 5. விரகு (தந்திரம்) - யாழ்ப்.

ம.சுருட்டு, தெ. த்சுட்ட, க. சுட்டி.

சுருட்டு

சுருட்டி

=

1. பெரியோர்முன் சுருட்டி வீசப்படும்

பாவாடை. 2. எடுபிடிவகை. “சந்த்ரோதயம்போற் றயங்குஞ் சுருட்டிவர’” (கூளப்ப. 69). 3. ஒரு பண். 4. ஒரு பூண்டு (மலை.). தெ., க. சுரட்டி.

சுருட்டு - சுருட்டை = 1. சுருள்மயிர். 2. விரியன் பாம்புவகை. 3. மிளகாய்ச் செடியிற் காணும் நோய்வகை.

ம. சுருட்ட.

சூர்-(சுரு) - சரு- சருவு. சருவுதல் = சாய்தல், சரிதல். சருவு- சருவல் = 1. சாய்வு. 2. சரிவான நிலம். சருவுசட்டி = மேல் நோக்கிச் சரிவான சட்டி. சருவு - சருவம் = மேல்நோக்கிச் சரிவாகவுள்ள கலம்.

சருவம் - வ. சராவ.

சருவப் பானை, சருவச்சட்டி என்னுங் கலங்கள் மேனோக்கிச் சரிவாயிருத்தலைக் காண்க. “வாயகன்ற பாத்திரவகை” என்று சென்னைப் ப. க. க. தமிழ் அகரமுதலி (Lexicon) இயல் வரையறுத்ததோ டமையாது, சராவ என்னும் வடசொல்லின் திரிவாகவுங் காட்டியிருப்பது, அதைத் தொகுத்த பிராமணப் பண்டிதரின் நெஞ்சழுத்தமான குறும்புத் தனத்தையே காட்டுவதாகும்.

சருவு சரிவு. Declivity, steep side of a rock; சரிவு(W.).

சருவு- சருகு. சருகுதல் = சரிதல்.

சருகு- சருக்கு. சருக்குதல் = சாய்தல், சரிதல், வளைதல், வழுவுதல், வழுக்குதல், சறுக்குதல்.

ம. சர்க்கு. தெ., க. ஜருகு.

சருக்கு - சறுக்கு. சறுக்குதல் = 1. வழுக்குதல். “ஆனைக்கும் அடி சறுக்கும் " (பழமொழி). 2. வழுவுதல். 3. கருமம் தவறுதல்.