பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

சுல்" (வளைதற் கருத்துவேர்)

115

பதநீரை (தெளிவை) அக்காரநீர் என்பது நாஞ்சில்நாட்டு வழக்கு. அக்காரம் என்று மாங்கனிக்கும் பெயர். அக்காரக்கனி நச்சுமனார் என்னும் புலவர் பெயர் அக் கனியைப் பாடியதனால் வந்தது போலும்! சக்கரம்– (சக்கு) - செக்கு = எண்ணெயாட்டும் வட்டமான பேருரல். செக்கு- செக்கான் = எண்ணெய் வாணியன்.

ச - செ. ஒ.நோ: சத்தான் - செத்தான். சற்றே பொறு - செத்த (கொச்சை) பொறு. சருமன் (வ.)- செம்மான்.

சக்கு - சக்கடம் - சக்கடா = கட்டைவண்டி. தெ. செக்கடாபண்டி. சக்கரத்தின் பெயர் அதை யுறுப்பாகக் கொண்ட ஊர்திக்கு ஆகிவந்தது சினையாகுபெயர். ஒ. நோ : வண்டி = சக்கரம், சக்கரத்தையுடைய ஊர்தி. இன்றும், கமலை வண்டி, வண்டி யுருட்டுதல் என்னும் வழக்குகளை நோக்குக.

சக்கடம்- சகடம் = 1. சக்கரம். 2. வண்டி. “பல்கதிர் முத்தார் சகடம்” (சீவக. 363).3. தேர். “சகட சக்கரத் தாமரை நாயகன்” (கந்தபு. காப்பு. 1). 4. தேர்வடிவ அணிவகுப்பு. “சகடமாம் வெய்ய யூகமும்” (பாரத. எட்டாம். 3). 5. ஒரு நாண்மீன் (19B1.). 6. முரசு (LBI.).

7. வட்டில் (பிங்.).

சகடம் - சகடு - சகடி = வண்டி. சகடி- சகடிகை = கைவண்டி. சகடம் வ.சகட்ட. சகடி- வ. சகட்டீ, பிரா. சாட்டீ. சகடிகை- வ. சகட்டிகா.

"

சகடு - 1. வண்டி “பெருஞ்சகடு தேர்காட்ட” (பெரியபு. திருநா. 6.). 2. தேரைக் குறிக்கும் சூதரங்குக்காய். 3. ஒரு நாண்மீன். “வானூர் மதியஞ் சகடணைய” (சிலப். 1: 50). ம. சகடு. சகடு என்னும் வடிவம் வடமொழியில் இல்லை.

சகடு - சாகாடு = வண்டி. "பீலிபெய் சாகாடும்” (குறள். 476).

சகடு - சாடு = வண்டி. “குறுஞ்சாட் டுருளை” (பெரும்பாண். 188). ம.சாடு .சாடு - சாடுகம் - வண்டி.

ம.சாடு.சாடு

சகடு சகடை = 1. வண்டி (புறம். 60 : 8, உரை). 2. பெருமுரசு. “சகடையோ டார்த்த வன்றே” (கம்பரா. பிரமாத்திர. 5). 3. அமங்கலச் சிறுபறை.

சகடை - சகண்டை = பெருமுரசு (பிங்.).