பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

சுல்* (வளைதற் கருத்துவேர்)

117

'அம்' பெருமைப்பொருட் பின்னொட்டாதலால், இலக்கண நெறிப்படி, சங்கம் என்பது பெருஞ் சங்கையே குறிக்கும். சங்கு என்னும் இயல்பான வடிவு வடமொழியிலின்மை, அது வடசொல் லன்மையை யுணர்த்தும்.

சுர்- சூர். சூர்த்தல் = சுழலுதல். “சூர்த்த நோக்கு”.

=

சூர் = சூர்ப்பு = 1. சுழற்சி. 2. கைக்கடகம். “சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை” (புறம். 153: 3).

1).

சூர்ப்பு- சூர்ப்பம் = வளைந்த முறம் (பிங்.). வ.சூர்ப்ப.

சூர் - சூரல் = சுழித்தடிக்கை. “சூரலங் கடுவளி யெடுப்ப” (அகம்.

சுர்- சுறு - சுற்று. சுற்றுதல் = 1. வளையக் கட்டுதல். "சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்பலவர்” (திருக்கோ. 134). 2. உடுத்துதல். ‘கூறையைச் சுற்றி வாழினும்” (நாலடி. 281). 3. வளையச் சூடுதல். "குடர்நெடு மாலை சுற்றி” (திருவாச. 6:30). 4. சுருட்டுதல். பாயைச்சுற்று (உ. வ.). 5. சுழற்றுதல். சிலம்பஞ் சுற்றுகிறான். (உ. வ). 6. சூழ்ந்திருத்தல். "தோகை மாதர்கள் மைந்தரிற் றோன்றினர் சுற்ற’ (கம்பரா. பிEவீட். 45). 7. வளைந்து பற்றுதல். “காலிற் சுற்றிய நாகமென்ன” (கம்பரா. நீர்விளை. 11). 8. சுற்றியியங்குதல். கடிகாரத்தில் நிமைய முள் ஒரு மணிக்கு ஒரு முறை சுற்றிவரும். (உ. வ.). 9. சுற்று வழியிற் செல்லுதல். அங்குமிங்கும் அலைதல். 11. சுழன்று செல்லுதல். ஞாலம் ஒரு நாளைக்கு ஒரு முறை சுற்றும். (உ. வ.). 12. கிறுகிறுத்தல். பித்தத்தினால் தலை சுற்றுகிறது. (உ. வ.).

10.

ம.சுற்று, க.து. சுத்து, தெ.த்சுட்டு.

சுற்று - சுற்றம் = 1. சூழவிருக்கும் உறவினர். 2. தலைவியின் தோழிமார் கூட்டம். “தொடிமாண் சுற்றமு மெம்மு முள்ளாள்” (அகம். 17). 3. அரசனின் உறுதிச் சுற்றம் அல்லது பரிவாரம்.

ம.சுற்றம்,தெ. த்சுட்டமு.

திருச்சுற்று = கோவிலின் சுற்றுத்தெரு.

சூழ்தல்."சூறிய

சுறு - சூறு. சூறுதல் = சூழ்தல். "சூறிய விமையோர்” (பாரத. காண்டவ. 31).

-

சூறு - சூறை = 1. சுழல்காற்று. 'சூறை மாருதத்து" (திருவாச. 3 : 10). 2. சுழல்காற்றுப் போல் வாரிக்கொண்டு போம் கொள்ளை.

சூறை (கொள்ளை) - க. சூறெ, து.சூரெ, தெ. சூர (c). சூறாவளி = சூறைக்காற்று.

=