பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சுல்

சொல் சொலி. சொலித்தல்

வேர்ச்சொற் கட்டுரைகள்

=

1. தோண்டுதல்.

2. பிளத்தல். 3. உரித்தல். “காம்பு சொலித்தன்ன அறுவை’(சிறுபாண். 236). 4. பெயர்த்தல். “திங்க ளுகிரிற் சொலிப்பதுபோல்” (சீவக. 350).

6

சொல்லுதல் = தீர்த்தல். “துணைவனுக் குற்ற துன்பஞ் சொல்லிய தொடங்கி னாளே" (சீவக. 1146).

சொலி = உரி, தொலி, பட்டை. "கழைபடு சொலியி னிழையணி வாரா” (புறம்.383).

சொல்- சொள்

சொள்ளை = 1. துளை. 'ஒற்றைக் கடுக்கன்

சொள்ளை' (உ. வ.) 2. உள்ளீடற்ற சொத்தை. 3. பள்ளமான அம்மைத் தழும்பு. அம்மைச் சொள்ளை' (உ. வ.). 4. குற்றம்.

சொள்- சொள்ளல் = குற்றம்.

சொள்- சொண்டு = சொத்தை மிளகாய்.

சொண்டு- சொட்டு = குற்றம். சொட்டு - சொட்டை = சொத்தை, குற்றம். சொட்டை - சொத்தை = 1. உள்ளீடற்றுக் கறுத்த பழம். 2. புழுத்த காய். 3. பூச்சியரித்த பல்.

சொத்தை- சூத்தை (கொச்சை வழக்கு).

சொள்- சொளு. சொளுசொளுத்தல் = எளிதாய்த் துளைக்கு மாறு ழ்போற் குழைதல், சேறாதல். ஒ.நோ: நொள் நொளுநொளுத்தல்.

நொளு.

சொளுசொளுவெனல் = நெய் தேன் முதலியன வடிதல், சொள் (சொள்ளு) = சாளைவாயினின்று வடியும் நீர்.

சொளுசொளு - சொலுசொலு. சொலுசொலெனல்

குழைதல்.

=

சோறு

சொளுசொளு - சொதுசொது. சொதுசொது வெனல் = சேறுபோற் குழைந்திருத்தல்.

சொது - சுது - சுதை = சேறுபோன்ற சுண்ணாம்பு அல்லது சிப்பிச் சாந்து. சுதை - வ. (sudha).

"ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணங் கொளல்"

என்று திருவள்ளுவரும்,

(குறள்.714).

"வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து’(மணிமே. 6 : 43)

என்று சீத்தலைச் சாத்தனாரும் கூறுவதால், சுதையென்பது தென் சொல்லே.