பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

வேர்ச்சொற் கட்டுரைகள்

(சேதுபு. அனுமகுண். 8) 5. ஏற்றம். 6. நூறுபலங் கொண்ட நிறை. 7. கனம். துலை - வ. துலா.

துல் - துன். துன்னுதல் = 1. பொருந்துதல். 2. அணுகுதல். “யாவருந் துன்னல் போகிய துணிவினோன்” (புறம். 23). 3. செறிதல். “துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்” (நாலடி. 167). 4. அடைதல். ‘‘துன்னருஞ் சீர்’” (நாலடி. 226). 5. மேவுதல். “துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல்” (குறள். 316). 6. தைத்தல்.

“நீயிங் குடுத்திய கந்தையைத் துன்னுவாரிலையோ” (அருட்பா.1, சாட்சிப்பெரு. 4).

துன்னார் = பகைவர். “தொல்லமருட் டுன்னாரைச் செற்றும்' (கம்பரா. சரபங்க. 26).

துன்னியார் = நண்பர். "மன்னர் திருவு மகளிர் எழினலமுந் துன்னியார் துய்ப்பர்” (நாலடி. 167).

துன்னு = உடம்பிற் பொருந்திய தசை.

துன்னல் = தையல். 'துன்னற் சிதாஅர் துவர நீக்கி” (பொருந. 81). துன்னம் = தையல். "இழைவலந்த பஃறுன்னத்து” (புறம். 136).

துன்னர் = தையற்காரர் (பிங்.). துன்னகாரர் = தையற்காரர். “துன்ன காரருந் தோலின் றுன்னரும்” (சிலப். 5: 32).

துன்- துன்று. துன்றுதல் = 1. பொருந்துதல். “கொன்றை மதியமுங் கூவிள மத்தமுந்துன்றிய சென்னியர்” (திருவாச. 17: 10). 2. நெருங்குதல்.

66

துன்றுகரு

3. கிட்டுதல்.

நறுங்குஞ்சி

(கம்பரா.

=

குகப்.

துன் - தும் - துமல் - துவல். துவலுதல் = நிறைதல்.

-

துவல் - துவன்று. துவன்றுதல்

28).

1. நெருங்குதல். 'வானம் வெளியறத் துவன்றி” (கம்பரா. நாகபா. 97). 2. கூடியிருத்தல். “ஏமஞ் சான்ற மக்களொடுதுவன்றி” (தொல். பொருள் 192). 3. குவிதல். “அகன்கட் பாறைத் துவன்றி” (மலைபடு. 276).

துவன்று = நிறைவு. "துவன்று நிறைவாகும்” (தொல். 815).

(

துல் - துறு. துறுதல் = 1. நெருங்குதல். “துறுமல ரவிழ்குழ லாய்” (சிலப். 7:42). 2. அடைதல். “சோர் பொழு தணிநகர்துறுகு வர்” (கம்பரா. திருவவ. 132). 3. குவிதல். 4. கூடுதல். க. துறுகு (g).

துறு துறுமு. துறுமுதல் நெருங்குதல். "நறுமலர் துறுமி”

(பெருங். இலாவாண. 15 : 6).

=

,