பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துல்' (பொருந்தற் கருத்துவேர்)

துறுமு

127

துறும்பு. துறும்புதல் = நெருங்குதல். "கொன்றையு நாகமுந் துறும்பு செஞ்சடை” (தேவா. 370 : 5).

துறு – துறை = 1. பலர் கூடுமிடம். 2. பலர் கூடிக் குளிக்கும் நீர்த்துறை. "தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும்” (மணிமே. 1: 65). 3. வண்ணார் கூடித் துவைக்கும் வண்ணான் துறை. “`துறைச்செல்லா ளூரவ ராடைகொண் டொலிக்குநின் புலைத்தி” (கலித். 72 : 13). 4. கடற்றுறை. "துறைவளர் நாட்டொடு” (சீவக. 1618). 5. துறைநகர். 6. கல்விக்கடலின்துறைபோன்ற கலை அல்லது அறிவியல். 7. கலைப் பிரிவு அல்லது கல்விப் பகுதி. 8. பகுதி. 'வீர ராயவர் புரிவ தாண்மைத் துறையென லாயிற் றன்றே” (கம்பரா.). 9. தமிழ்ப் பொருளிலக்கணத்தில் அகமும் புறமும்பற்றிய பொருட் கூறு. "ஒண்டீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ” (திருக்கோ. 20). 10. பொருட்டுறைபற்றி வரும் செய்யுள் வகை. 11. மூவகைப் பாவினத்துள்

ஒன்று.

துறைபோதல் = 1. ஒரு கல்வித்துறையில் முழுத் தேர்ச்சி பெறுதல். 2. எடுத்த கருமத்தில் வெற்றி பெறுதல். “எண்ணியவை யெல்லாந் துறைபோத லொல்லுமோ” (கலித். 67).

துறுகல் = 1. திரண்ட கல், பாறை, “வேழ மிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழூஉம்” (ஐங்.239). 2. குன்று. “துறுக லேறி” (ஐங். 210). துறு- துறுத்து (பி. வி.).துறுத்தல் = திணித்தல். “வாயிலே சீரையைத் துறுத்து" (ஈடு.9:9:1).

ம. துறு, க. துறுகு, தெ. துறுகு (g)

துல் - துள் = துண் - துணர் = = 1. கொத்து. 2. பூங்கொத்து. “பொற்றுணர்த் தாமம்” (கல்லா. 10). 3. குலை. “சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்” (ஐங். 214).

துணர்த்தல் = கொத்துடையாதாதல். "துணர்த்த பூந் தொடைய லான்" (கம்பரா. வேள்வி. 53).

துணர்தல் - திணிதல், திரளுதல், கொத்தாதல்.

"இருடுணர்ந் தனைய குஞ்சியன்” (சூளா. குமார. 6).

துணர் - தணரி = பூங்கொத்து. “துணரி ஞாழல் நறும்போது நஞ்சூழ் குழற்பெய்து” (திவ். பெரியதி. 9:3:5).

=

துண் = துணை = 1. ஒப்பு. '"துணையற வறுத்துத் தூங்க நாற்றி” (திருமுருகு.237). 2. கூட்டு. 3. புணர்ச்சி. "முந்நாளல்லது துணையின்று