பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

வேர்ச்சொற் கட்டுரைகள்

தொழுதி-தொகுதி = 1. சேர்க்கை. “வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்” (தொல். சொல். 33). 2. கூட்டம். “தெய்வப் பெயர்த் தொகுதி" (திவா.). "வினையின் றொகுதி பொறுத்தெனை யாண்டுகொள்” (திருவாச. 6 : 6). 3. சவை (பிங்.). 4. மந்தை. 5. மொத்த வெண். “உம்மை யெண்ணு மெனவெ னெண்ணும் - தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே" (தொல்.சொல்.289). 6. சொல்லின் அல்லது சொல்லுறுப்பின் மறைவு. “தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்” (தொல். எழுத்து. 132, உரை).

தொகு- தொகுப்பு = 1. கூட்டம். "தொகுப்புறு சிறுவர்” (அருட்பா, VI, பிள்ளைப்பெரு. 32). 2. தொகை.

தொகுப்பு- தோப்பு = சோலை (பிங்.).ம.,தெ.,க.,து. தோப்பு. தொகு - தொகை = 1. சேர்க்கை. “உயர்திணைத் தொகை வயின்” (தொல்.சொல். 90). 2. கூட்டம். “உன்னடியவர் தொகை நடுவே" (திருவாச. 44 : 1). 3. புலவர் கழகம். “மதுரைத் தொகையாக்கி னானும்” (தேவா. 1179 : 11). 4. உயிரிகளின் திரள். "புள்ளின் றொகையொப்ப” (பு. வெ. 6 : 20). 5. கொத்து. "தொகைப்பிச்சம்” (கம்பரா. எதிர்கோட். 7). 6. மொத்தம். 7. எண்.

“ஏயி னாகிய வெண்ணி னிறுதியும்

யாவயின் வரினும் தொகையின் றியலா”(தொல். சொல். 292)

8. தொகுத்துக் கூறுகை.

"தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்

ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே”

(தொல்.1597)

9. சொல்லும் சொல்லுறுப்பும் மறைகை. “ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே” (தொல். சொல். 78).

10. அறுவகைத் தொகைநிலைத் தொடர். "எல்லாத் தொகையு மொருசொன்னடைய” (தொல். சொல். 420). 11. பதினெண் மேற்கணக்கில் எட்டுத்தொகை. “அது தொகைகளினுங் கீழ்க் கணக்கினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க” (தொல். பொருள். 5, உரை).

தொள்- தொண்- தொண்ணை = பருமன். தொண்ணைத் தடி =

பருந்தடி.

தொள்- தொடு. தொடுதல் = 1. தீண்டுதல். “தொடிற்சுடி னல்லது” (குறள். 1159). 2. பொருந்துதல். 3. பிடித்தல். “தொட்ட மூவிலைச் சூலந் துளக்குவார்” (கந்தபு. வீரபத். 38). 4. எடுத்தல். “பதுமுகன் சிலைதொட்