பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

வேர்ச்சொற் கட்டுரைகள்

தொறு = உம்மீறு பெற்றுப் பொருளிடங் காலம் ஒவ்வொன்றும் என்னும் பொருள்படவரும் இடைச்சொல்.

3).

2.

"நவில்தொறும் நூல்நயம் போலும்” (குறள். 783).

தொறு - தோறு. “காண்டோறும் பேசுந்தோறும்” (திருவாச. 10 :

தொறு - தொற்று. தொற்றுதல் = 1. கைகால்களாற் பற்றுதல். பற்றியேறுதல் அல்லது படர்தல். "புரைதீர் தவந்தொற்று கொள்கொம்பெனுந் தெய்வமுனி" (உபதேச. சிவபுண்ணிய.93). 3. ஒட்டிக்கொள்ளுதல். தொற்றுநோய் = ஒட்டிக்கொள்ளும் நோய்.

தொற்று- தொத்து. தொத்துதல் = 1. பற்றுதல். "கோற்றொத்து கூனனும்” (பதினொ. திருத்தொண். 48). 2. ஒட்டுதல். "உடுமீன் தொத்த புலி கனகக்கிரி வெயில் சுற்றிய தொத்தான்” (கம்பரா. பிரமாத். 117). 3. பற்றியேறுதல். “நரருமினித் தொத்துவர்” (திருவாலவா. 29 :1). தொற்றுநோய் - தொத்துநோய்.

தொத்து = 1. பற்று. “சித்தந் தொத்தற” (ஞானவா. சுரகு. 23). 2. தொடர்பு. "தொத்தற விட்டிட” (திருமந். 2245). 3. திரள். "தொத்தொளி முத்துத் தாமம் ” (சீவக. 2653). 4. பூ இலைகாய் முதலியவற்றின் கொத்து. “தொத்தீன் மலர்ப்பொழிற் றில்லை” (திருக்கோ. 121). 5. அடிமை. 6. வைப்பாட்டி.

தொத்து- தொத்தன் = அடிமையாள்.

தொத்துவான் = தொத்துநோய்.

தொத்துக்குட்டி

1. உடன்பற்றித் திரிபவன். 2. குரங்குக் குட்டிபோல் தாயைப் பற்றிக்கொண்டிருக்கும் குட்டி அல்லது பிள்ளை.

தொத்து- தொத்தாய் = சிறிய தாய். (சென்னை வழக்கு).

தொத்து- தொத்தை - தத்தை = இலையைப் பற்றிக்கொண்டு தொங்கும் கிளி. இ. தோத்தா.

தொத்து - தொந்து - தொந்தம் = 1. தொடர்பு. "தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்” (தேவா. 4 : 4). 2. உறவு, உறவாட ல். 3. தொடுப்பு. 4. புணர்ச்சி. 5. இரட்டை. வ. த்வந்த்வ.

துறு- துற்று. துற்றுதல் = நெருங்குதல். “மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற” (தேவா. 83 : 1). க. துத்து.

துற்று = கூட்டம் (பிங்.). தெ, துத்த.