பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துல்1 (பொருந்தற் கருத்துவேர்)

135

துற்று - துத்து - துது - துதை. துதைதல் = 1. செறிதல். “தோடமை முழவின் துதைகுர லாக” (அகம். 82). 2. மிகுதல்.

460).

துதை - ததை. ததைதல் = நெருங்குதல். 'ததையிலை வாழை” (ஐங்.

துது – தொது – தொதி = பப்பரப்புளி.

தொது - தோது = 1. தொடர்பு. அதற்கும் இதற்கும் என்ன தோது? (உ.வ.). 2. பொருத்தம். மாப்பிள்ளைக்கும் பெண்ணிறகும் தோதில்லை. (உ.வ.).3.ஒப்பு. அவனுக்குத் தோது எவனுமில்லை. (உ.வ.).

தெ.,க.தோடு.

தும் - திம் திம்மை

=

1. பருமன். 2. கண்டை (சரிகை)

முதலியவற்றின் பந்து.

திம் - திம்மன் = 1. தடித்தவன். 2. ஆண்குரங்கு.

க .திம்ம,தெ .திம்மடு.

திம்மலி = தடித்தவள் (யாழ்.). திம்மலி- திமிலி.

திம்மலி = பெருமீன் (திவா.). வ. திமி.

திமி - திமிசு = தளத்தைக் கெட்டியாக்குங் கட்டை. தெ. திமிச. திமிதம் = 1. பேரொலி. 2. உறுதி (யாழ். அக.).

=

திமிர் = 1. மரத்துப்போகை. 2. உணர்ச்சியறும் நோய். 3. மனக் கொழுப்பு. ம. திமிர், தெ. திமிK.

திமில் = 1. திரண்ட எருதின் முரிப்பு. 2. திண்ணிய மீன்படகு.

"திண்டிமில் வன்பரதவர்” (புறம். 24).

திமில் திமிலம் = 1. பேரொலி. “திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்” (திருவாச. 29 : 4). 2. பெருமீன் வகை (பிங்.). திமுதிமுவெனல் = மக்கள் திரளாக வந்து கூடுதற் குறிப்பு.

திமுக்குத் திமுக்கெனல் = தடித்த ஆள், சிறப்பாகப் பெண் நடந்து போதற் குறிப்பு.

=

துல் - தில் - திர் - திரள். திரளுதல் 1. கூடுதல். மக்கள் திரளுகிறார்கள். (உ. வ.). 2. மிகுதல். “அவலு மிசையு நீர்த்திரள் பீண்டி” (மதுரைக். 240). 3. இறுகுதல். பால் திரண்டுவிட்டது. 4.பருத்தல். "தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி” (நாலடி.199). 5. வீங்குதல்.