பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

வேர்ச்சொற் கட்டுரைகள்

திரிதருங் காலத்து” (நாலடி. 284). 7. திருகுதல். “திரிந்து மறிந்துவீழ் தாடி” (கலித். 15). 8. வேறுபடுதல். “நாஅல் வேத நெறிதிரியினும்” (புறம். 2). 9 எழுத்து மாறுதல். "தோன்றல் திரிதல் கெடுதல்' (நன். 154). 10. சொல் மாறியமைதல். "சொற்றிரியினும் பொருள் திரியா வினைக்குறை” (நன். 346). 11. மயங்குதல். "திரிந்தயர்ந்தகன்றோடி” (பரிபா. 3:54). 12. கெடுதல். (திவா.).

க.திரி, தெ. திருகு, ம. திரிக்க.

திரித்தல் = 1. சுழற்றுதல். “எஃகுவலந் திரிப்ப” (திருமுருகு. 111). 2. முறுக்குதல். 'கயிறு திரிக்கிறான்' (உ. வ.). 3. திரும்பச் செய்தல். “சென்றுசென் றழியு மாவி திரிக்குமால்” (கம்பரா. மாயாசனக. 23). 4. அலைவித்தல். "கொடிப்புள் திரித்தாய்” (திவ். பெரியதி. 1: 10 : 2). 5. வேறுபடுத்துதல். “அறிவு திரித்து” (மணிமே. 23:39). துயவென் கிளவி அறிவின் திரிபே” (தொல். 851). 6. திரிகையில் மா வாக்குதல். 7. பொருள் மாற்றுதல். 8. சொல்வடிவு மாற்றுதல். 9. மொழிபெயர்த்தல். 10. மடக்கின் முதலெழுத்தை மாற்றுதல். 11. சேதித்தல். “அவனுருவு திரித்திட்டோன்” (பரிபா. 5:35). ம. திரிக்க, க. திருகிசு.

திரி - திரிவு = 1. வேறுபாடு. “திரிவின்றித் துஞ்சேமென மொழிதி” (பு. வெ. 12 : 15). 2. திரிபுக்காட்சி. “ஐயமே திரிவே யென்னு மவையற (விநாயகபு. 2: 46). க. திரிவு.

=

திரிவு - திரிபு = 1. வேறுபாடு. “குறிதிரி பறியா வறிவனை” (கலித். 39 : 46). 2. (வீடுபேற்றிற்கு இடையூறாய் நிற்கும்) மயக்க அறிவு. 3. முதலெழுத்தல்லாத தொடர்கள் எழுத்தொத்து வரும் மடக்கு.

திரிசொல் = 1. வேறுபட்ட சொல். 2. இயற்சொல்லினின்று வேறுபடுத்தி யமைக்கப்பட்ட சொல்.

=

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்று” (தொல். 880). திரிகல் மாவரைக்குங் கல். 'திரிக லொப்புடைத் தாய... தொண்டகம்” (கல்லா. 24 : 13). திரிமரம் கூலம் அரைக்கும் மரம். “களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்” (பெரும்பாண். 187). திரி - திரிகை = 1. திரிகல். 2. குயவன் சக்கரம். “குயவர் திரிகையென” (கம்பரா. மூல பல. 165).3. கூத்தின் சைகைவகை. (சிலப். ப. 81).

திரி- திகிரி = 1. வட்டவடிவு (பிங்.). 2. குயவன் சக்கரம். “அத்திகிரி பரித்த பச்சை மண்ணென லாகும்” (காஞ்சிப்பு. திருநகரம். 76). 3. சக்கரப்படை. "கால நேமிமே லேவிய திகிரிபோல்" (கம்பரா. சித்திர. 40). 4. கதிரவன். “விசும்புடன் விளங்கும் விரை செலற் றிகிரி” (அகம்.