பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

துல் (துளைத்தற் கருத்துவேர்)

147

மூழ்கித் துளைந்து" (தாயு. வம்பனேன். 2). 2. அழுந்திக் கிடத்தல். "குடும்பக் கூத்துட் டுளைந்து” (தாயு. சொல்லற். 7).

துளைத்தல் = 1. துளையிடுதல். 2. ஊடுருவுதல். 3. துன்புறுத்து தல், தொல்லை கொடுத்தல். ஓயாமல் அவனைத் துளைக்கிறான். (உ. வ.). 4. கிண்டிக் கேட்டல், கரும விளத்தம் வினவுதல். விழாவின் வரவுசெலவுக் கணக்குப்பற்றி அவனைத் துளைத்துக் கொண்டிருக் கிறான். (உ. வ.).

ம. துளைக்க., தெ. தொளுச்சு.

துளை = 1. ஓட்டை, குழி (பிங்.). 2. வாயில். 3. உட்டொளை. 4. உட்டொளையுள்ள மூங்கில் (பிங்.). துளையுள்ளது போன்ற மயிர்ச் சுருட்சி. ‘“துளையார் கருமென்குழ லாய்ச்சியர்” (திவ். பெரியதி. 3:8:8). 6. வயிரக் குற்றங்களுள் ஒன்று. "துளைகரி விந்து காக பாதம் " (சிலப்.14: 180, உரை).

ம. துள, தெ. தொள, க. தொளெ, து. தொளு.

துளைக்கருவி = துளையுள்ள இசைக்கருவி.

துளைக்கை = தும்பிக்கை (யாழ். அக.).

துளைச்செவி = 1. செவியுட்புறம். 2. உட்செவியுள்ள உயிரிவகை.

துளைப்பு - 1. துளையிடுகை. 2. தொந்தரவு செய்கை. துளைப் பொன் = தூய்மைக்கு அடையாளமாகத் துளையிடப்பட்ட மாற்று யர்ந்த தங்கம். (I. M. P. T]. 138). (பெருங். இலாவாண. 6: 63).

துளையம் = நீரிற் குடைந்து விளையாடுகை. “வெள்ளநீர்த்துளைய மாடி” (குமர. பிர. முத்துக். பிள். 52).

துளை- திளை– திளைத்தல் = 1. நீரில் முழுகுதல். 2. நீரிற் குடைந்து விளையாடுதல். 3. இன்புறுதல். 4. ஒரு வினைமுயற்சியில் அமிழ்தல்.

துள் - துள- துழ. துழத்தல் = துளைத்துக் கிண்டுதல். துழாவுதல். "தொடித்தோள் துடுப்பிற் றுழந்த வல்சியின்” (புறம். 26). 'இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்” (புறம். 188). க. தொளசு.

7:7).

.

துழ - துழதி = துன்பம். "பிறவித் துழதி நீங்க” (திவ். திருவாய். 28

துழ - துழவு. துழவுதல் = 1. கிண்டுதல், துழாவுதல். “வழையமை சாரல் கமழத்துழைஇ" (மலைபடு. 181). 2. துழாவுதல் போற் சூழ வருதல்,