பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

வேர்ச்சொற் கட்டுரைகள்

தேடுதல் = 1. துருவி யலைந்து பார்த்தல். "தேடினே னாடிக் கண்டேன்” (தேவா. 1189 :3). 2. துருவி யாய்தல். 3. பொருள் ஈட்டுதல். “பாடுபட்டுத் தேடி ” (நல்வழி, 22). 4. போற்றுதல், விரும்புதல். அவனைத் தேடுவார் ஒருவருமில்லை. (உ. வ.). ம. தேடுக.

தேடு - தேட்டு- தேட்டம். ஒ.நோ: நோண்டு- நோடு - நோட்டம்.

தேட்டம் = 1. துருவித் தேடுகை. 2. பொருள் ஈட்டுகை. 3. ஈட்டப்பட்ட பொருள். "தேட்டற்ற தேட்டமே" (தாயு. தேசோ. 5). 4. விருப்பம். “தேட்டந்தான் வாளெயிற்றிற் றின்னவோ” (கம்பரா. சூர்ப். 121). அவனுக்கு அதில் தேட்டமில்லை. (உ. வ.).

6

தேட்டாளன் = 1. முயற்சியாற் பெரும்பொருள் ஈட்டியவன். "தேட்டாளன் காயற்றுரை சீதக் காதி” (தனிப்பா. தொ. 1, 238) 2. தேட்டிற்குரிய புதல்வன். (இ.வ.).

தேட்டு - தேட்டை = தேட்டம்.

தோண்டு- தோண்டான் = ஓநாய் (சது.).

கழுத்து, மார்பு, வயிறு ஆகியவற்றைக் கடித்துச் சதையைத் தோண்டித் தின்றுவிடுவதால், ஓநாய் தோண்டான் என்று பெயர் பெற்றது போலும்!

தோண்டி

=

மரத்தைக் குடைந்து தோண்டிச்

தோண்டு செய்யப்பட்ட சிறுகுடம், அதுபோன்ற மாழைக் கலம்.

துள் - துர் - துரு - துருவு. துருவுதல் = 1. துளைத்தல். 2. தேடுதல். “கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று” (குறள். 929), 3. குடைதல்.4. கடைதல்.

க.துருவு, தெ.துருமு.

OE., OS. thurh, OHG. duruh, Goth. thairh.

1

துரு - தூர். தூர்த்தல் = 1. உட்செலுத்துதல். “பழுக்கும் பழத்தைத் தூர்த்து” (தைலவ. தைல. 134). துரிசு. 2. அடைத்தல். “கடறூர்த்தன் மலையகழ்தல்” (சீவக. 2165). 3. மறைத்தல். 'விண்ணவர் விசும்பு தூர்த்தார்." (கம்பரா. கைகேயி. 74). 4. எல்லா வற்றையும் மறைத்துப் பொழிதல். "தூர்க்கின்ற மலர்மாரி தொடரப் போய்” (கம்பரா. இராவணன் வதை. 199).

தூர்தல் = 1. புகுதல். வீட்டிற்குள் தூர்ந்துவிட்டான். (வ. ஆ. வ.). 2. அடைபடுதல். "துளவாய் தூர்ந்த துரப்பமை யாணி” (பொருந.10).3 மறைதல். “வள்ளி நடந்தவழி தூர்ந்திடாது” (வெங்கைக்கோ. 345). ம.

தூருக.