பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துல் (தெளிவுக் கருத்துவேர்)

163

4. கொழித்தல் (யாழ். அக.). 5. தெரிந்தெடுத்தல் “தெரித்த கணையாற் றிரிபுற மூன்றுஞ் செந்தீயின் மூழ்க” (தேவா. 10: 7).

தெரிக்கல் = விளக்கமாய்ச் சொல்லுதல். “சைவத் திறத்தினைத் தெரிக்க லுற்றாம்” (சி. சி. பாயி. 2).

தெரியல் = 1. தெரிந்தெடுத்தல். "தேங்கமழ் தெரியற் றீம்பூந் தாரவன்” (சீவக. 2253). 2. தெரிந்தெடுத்த பூவால் தொடுத்த மாலை. “புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்” (புறம். 29).

தெரிவை = 25 முதல் 31 வரைப்பட்ட அகவையுள்ள பெண். (திவா.).

தெர்- தெருள். தெருள்தல் = 1. தெளிதல். “தெருண்ட வறிவினர்” (நாலடி. 301). 2. மெய்யறிவுறுதல். "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்" (குறள்.249).3. உண்மை விளங்குதல். "வளமலை நாடனைத் தெருள.... நீயொன்று பாடித்தை” (கலித். 43). 4. பெண் பூப்படைதல். பிள்ளை தெருண்டுவிட்டாள். (2. வ.). 5. பெயர் பரவி விளங்குதல். "தெருளு மும்மதில்” (திருவாச. 26 க 10).

தெருள் = 1. தெள்ளுணர்வு. “தெருளு மருளு மயங்கி வருபவள்” (கலித். 144). 2. தெள்ளறிவு (ஞானம்). “தெருளு மருளு மாய்த்து” (திவ். திருவாய். 8:8: 11).

மயக்கத்தையும் அறியாமையையும் குறிக்கும் மருள் என்னும் சொல்லும், அதற்கு மறுதலையான தெருள் என்னும் சொல்லும், எதுகையா யிருத்தலை நோக்குக.

தெர்-தேர் .தேர்தல் = 1. உள்குதல் (சிந்தித்தல்). 2. ஆராய்தல். "தேர்ந்துசெய் வஃதே முறை” (குறள். 541). 3. தேடுதல். "சிறுவெண் காக்கை...... யிரைதேர்ந் துண்டு” (ஐங். 162). 4. தேற்றமுறுதல். (நிச்சயித்தல்). "பேதை பாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய” (திருவிளை. புராண வர. 8). 5. தெளிவாக அறிதல் ‘தேர்ந்தனன் முருகன் வாய்மை” (கந்தபு. மூவாயிர. 81). 6. தெரிந்தெடுத்தல். (செ. குன்றியவி.) பயின்று திறமை பெறுதல். ம. தேருக.

தேர்ச்சி = 1. ஆராய்ச்சி. 2. தெளிவு. 3. பயிற்சியாற் பெறும் பெருந் திறமை. ம. தேர்ச்ச.

தேர்வு = 1. ஆராய்ச்சி. 2. திறமை யறிகை.

தேர்தல் = பொதுமக்கள் ஆட்சித் தலைவனைத் தேர்ந்தெடுக்கை (இக்கால வழக்கு).

தெல்

-

தெள். தெள்ளுதல்

=

1. கொழித்தல். "வன்னத் தினைமாவைத் தெள்ளியே” (அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து).