பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

வேர்ச்சொற் கட்டுரைகள்

“கண்ணு தற்பெருங்கடவுளுங்கழகமோடமர்ந்து” (திருவிளை. திருநாட். 56), நாட்டாண்மைக் கழகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முதலிய வழக்குகளை நோக்குக. திருக்குறளிற் சூது என்னும் அதிகாரத்திலேயே, கழகம் என்னும் சொல் சூதாடரங்கைக் குறிக்கலாயிற்று. கல-கள-களகு - கழகு - கழகம்.

கள் - கட்சி = 1. போர்க்களம். “கட்சியுங் கரந்தையும் பாழ்பட’ (சிலப். 12. உரைப்.25).2. ஒரு கொள்கைபற்றிய கூட்டம். 3. மரமடர்ந்த காடு. “கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும்” (மலைபடு. 235).

கள் கண். கண்ணுதல் வொளிராழியின்” (இரகு. யாக. 17).

=

பொருந்துதல், "புடைகண்ணிய

கண் - கண, கணத்தல் = கூடுதல். கண - கணம் = 1. கூட்டம் “கணங்கொண்டு சுற்றத்தார் கலலென்றலற” (நாலடி. 25), “மான்கணம் மறலா” (சிலப். 13 : 6). 2. படைப்பகுதி. கணம் – வ. கண (ப்நிற்நி).

கணவர் = கூட்டத்தார். “பூத கணவர்” (கந்தபு. திருக்கயி. 8). ஆளுங் கணத்தார் = ஊராட்சியமைவார்.

31).

கணம்-கணன் = தொகுதி. "கணனடங்கக் கற்றானு மில்" (சிறுபஞ்.

கணம் - கணகம் = 27 தேர்களும், 27 யானைகளும், 81 குதிரை களும் 135 காலாள்களுங் கொண்ட படைப்பிரிவு (பிங்.).

கணம்

-

கணந்துள்

=

கூட்டமாக வாழும் பறவையினம்.

இருந்தோட் டருஞ்சிறை நெடுங்காற் கணந்துள்” (குறுந். 350).

கள் - கட்டு. கட்டுதல் = சேர்த்தல், பொருத்துதல், புனைதல், பிணித்தல், பூட்டுதல், உடுத்தல், தொடுத்தல், அமைத்தல், திரள்தல், நென்மூட்டை கட்டி அரசிறையாகச் செலுத்துதல். தாலி பூட்டி மணத்தல், செலவொடு வரவு பொருந்துதல், ஒத்தல், பொய்யாகப் புனைதல், மூடுதல், தடுத்தல், அடக்குதல்.

ம., தெ., க.,து. கட்டு.

6

கட்டு = 1. பிணிப்பு. “கட்டவிழ்தார் வாட்கலியன்” (அஷ்டப். நூற்றெட்.காப்பு). 2. மலப்பிணிப்பு. “கட்டறுத் தெனையாண்டு (திருவாச. 5 : 49). 3. மூட்டை. 4. கட்டடம் (பிங்.). 5. கட்டுப்பாடு. 6. ÁĹLMAT. 'கட்டுடைக் காவலிற் காமர் கன்னியே” (சீவக. 98). 7. காவல். “மதுவனத்தைக் கட்டழித்திட்டது” (கம்பரா. திருவடி. 18). 8. அரண். "கட்டவை மூன்று மெரித்த பிரான்" (தேவா. 386 : 7).