பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

வேர்ச்சொற் கட்டுரைகள்

குண்டலி = 1. மூல நிலைக்கள (ஆதார) வட்டம். (ஔவை. குறள் நினைப்புறு. 2). 2. தூயவுலகைத் தோற்றுவிக்கும் மூல மாயை (சி. போ. பா. 2:2, ப. 133). இதன் விளக்கத்தை என் 'தமிழர் மதம்' என்னும் நூலுட்

காண்க.

குண்டலி (தூயமாயை)- வ. குண்டலினி.

குண்டி

=

1. உருண்டு திரண்ட புட்டம். 2. குண்டி போன்ற

அடிப்பக்கம். ம. குண்டி, க. குண்டெ, தெ. குட்டெ.

=

குண்டு - கண்டு = நூற்பந்து. கண்டு - கண்டகம் = வட்டமான

மரக்கால்.

கண்டு - கண்டி = வட்டமான ஒரு கலம், ஒரு முகத்தலளவு, ஒரு நிறை. ம. கண்டி, தெ., து. கண்டி (kh), மரா. கண்டில் (kh).

(19151.).

கண்டி - கண்டிகை = 1. தோட்கடகம் (சூடா.).2. ஒருவகைப் பறை

கண்டிகை

கடிகை 1. நாழிகை வட்டில். 2. நாழிகை (24 நிமைய நேரம்) (திவா.) 3. நேரம். 4. சடங்குகட்கு மங்கல நேரங் குறிப்பவன். “கண்ண னாரொடு கடிகையும் வருகென” (சீவக. 2362). 5. தோட்கடகம். “கடிகை வாளார் மின்ன” (சீவக. 2808). கடிகை- வ. கட்டிகா (ghattika).

இவ் வடசொற்கு நாழிகைப் பொருளேயன்றிக் பொருளில்லை.

கடிகை + ஆரம் = கடிகையாரம்- கடிகாரம்.

ஒ.நோ : வட்டு - வட்டாரம், கொட்டு- கொட்டாரம்.

கடகப்

குளம் - குணம் - குணகு. குணகுதல் = வளைதல். குணக்கு = வளைவு. ‘நாய்வாலைக் குணக்கெடுக்கலாமா?' என்பது உலக வழக்கு. குணக்குதல் = வளைத்தல்.

=

குணலை = நாணத்தால் உடல் வளைகை. “கூச்சமுமாய்ச் சற்றே குணலையுமாய்” (பணவிடு 310).

குணகு- குணங்கு. குணங்குதல் = வளைதல்.

=

குணகு- குணுகு. குணுகுதல் = வளைதல். குணுக்குதல் = வளைத்தல். இளமகளிர் காதிலணியும் கனத்த ஈய அல்லது பித்தளை

குணுக்கு

வளையம்.

=

குணம் - குடம்

=

1. உருண்ட வடிவான நீர்க்கலம் (பிங்.). 2. குடக்கூத்து. "நீணில மளந்தோ னாடிய குடமும்” (சிலப். 6 : 55). 3. குடஞ்சுட்டு என்னும் ஆவு (சூடா.). 4. கும்பவோரை (பன்னிருபா. 163).