பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

வேர்ச்சொற் கட்டுரைகள்

குடந்தம்படுதல் = வணங்கி வழிபடுதல். "குடந்தம் பட்டெதிர் = நின்றிடும்” (காஞ்சிப்பு. கழுவாய். 96).

321).

குடந்தை = வளைவு. “குடந்தையஞ் செவிய கோட்டெலி” (புறம்.

குடம்பை = 1. முட்டை (பிங்.). “குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே” (குறள். 338). 2. புழுக்கூடு. "வரியுடல் சூழக் குடம்பை நூல் தெற்றி" (கல்லா. கணபதி துதி, 26). 3. பறவைக் கூடு. "குடம்பை முட்டையுங் கூடுமாகும்” (பிங். 10: 352).

குடம்பை குதம்பை = 1. காதுச் சோணைத் துளையை விரிவாக்குவதற்கு இடும் ஓலைச்சுருள் அல்லது சிலைச்சுருள். “சீலைக் குதம்பை யொருகாது" (திவ். பெரியாழ். 3: 3 : 1).

6

2. ஓலைச்சுருள் போன்ற பொற்காதணி. “திருக்குதம்பை யொன்று பொன் இருகழஞ்சே எட்டு மஞ்சாடி”(S.I.I.II, 143).

குடம்பை- குரம்பை = 1. பறவைக் கூடு. 2. சிறுகுடில். "இலைவேய் குரம்பை” (மதுரைக். 110). 3. நெற்கூடு (Larn). "நெற்குவை குரம்பையி

னிரப்பு

வித்தனர்”

(கந்தபு.

நாட்டுப்.

26).

4. கூடு போன்ற உடம்பு. “பொருந்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா” (தேவா. 488 : 1). ம. குரம்பு.

குடலை = உருண்டு நீண்ட பூக்கூடை.

66

குட குடா = 1. வளைவு. “எண்கின் குடாவடிக் குருளை' (மலைபடு. 501). குடாவடி யுளியமும்” (சிலப். 25 : 50). 2. வளைகுடா அல்லது விரிகுடா என்னும் வளைகடல். 3. மூலை.

குடா- குடாப்பு = கோழி, ஆட்டுக்குட்டி, பன்றி முதலிய வற்றை அடைக்கும் அரையுருண்டை வடிவான கூடு.

குடா- குடாரி = வளைந்த யானைத் தோட்டி (பிங்.).

=

குட - குடி = 1. வளைந்த புருவம் (பிங்.). 2. குடம்பை போன்ற குடிசை அல்லது வட்டமான வீடு. ‘சிறுகுடி கலக்கி” (கந்தபு. ஆற்று. 12). குடிக்கூலி வீட்டு வாடகை; முதற் காலத்தில் எல்லா நாட்டு வீடுகளும் வட்டவடிவாகவே இருந்தன. 3. ஒரு குலத்தார் தெரு அல்லது வீட்டுத்தொகுதி. எ டு: செக்காரக்குடி அல்லது வாணியக்குடி. 4. ஊர். எ - டு : காரைக்குடி. குடிகாவல் = ஊர்காவல். 5. வீட்டிலுள்ள மனைவி. எ - டு : அவனுக்கு இருகுடி. 6. குடும்பம் (வீட்டிலுள்ள கணவன் மனைவி மக்கள்). "ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்” (புறம். 183). 7. சரவடி. எ - டு : டு: சேக்கிழார் குடி. 8. குலம் (பிங்.). 9. குடிகள். “கோனோக்கி வாழுங் குடி” (குறள். 542).