பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

வேர்ச்சொற் கட்டுரைகள்

'ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம்

ஓங்காரா தீதத் துயிர்மூன்று முற்றன

ஓங்கார சீவ பரசிவ ரூபமே”

என்னும் திருமந்திரத்தை

(2677) ஆழ்ந்தெண்ணி,

பேருலகத்

தோற்றுவாய்க்குக் குடிலை என்னும் பெயர்த் தோற்றக் கரணியத்தை உய்த்துணர்ந்து கொள்க. குடிலை- வ. குட்டிலா (kutila).

குன் - கூன் = 1. வளைவு. 'கூனிரும்பினிற் குறைத்து” (நைடத. நாட்டுப். 10). 2. முதுகுகூனல் (திவா.). 3. கூனன் அல்லது கூனி. “கூனுங் குறளு மூமுஞ் செவிடும்” (புறம். 28). 4. பக்கக் கூனலுள்ள பெருங்கலம். “குருதி சாறெனப் பாய்வது குரைகடற் கூனில்” (கம்பரா. கிங்கர. 40). 5. கூன்போற் செய்யுளில் அளவிற்கு மிஞ்சி வரும் அசை அல்லது சீர். “சீர் கூனாதல் நேரடிக் குரித்தே.” (தொல். பொருள். செய். 48).

கூன் கூனல் = 1. வளைவு. கூனலங்காய் = புளியங்காய். ‘கூனலங்காய் தினையவரை” (திருவிளை. நாட்டு. 42). 3. முதுகு வளைவு. ‘கூனற் கிழவன் கொடுக்கும் பணயமதில்" (விறலிவிடு.).

=

கூன்- கூனி = 1. வளைந்த சிறிய இறால்வகை. 'கூனி கொத்தி.... கொக்கிருக்கும்” (குற்றா. குற. 94) 2. வானவில்.

கூன் - கூனை = 1. நான்மூலையிலும் கூனுள்ள தோல் நீர்ச்சால். “விழுந்த பேரைக் கூனைக்கொண் டமிழ்த்துவார்போல்” (குற்றா. குற. 28). 2. நீர்ச்சால் போன்ற பெருமிடா. “கரும்பேந்திரத் தொழுது சாறகன் கூனையின்” (கம்பரா. ஆறுசெல். 49).

குள் - கூள்.(கூளுதல் = வளைதல்) கூளி = வளைந்த பச்சைவாழைப் பழவகை. கூழாங்கல் = தேய்ந்துருண்ட சிறு கல்.

2.

கூள் - கூண்டு = 1. வளைந்த வண்டி முகடு. எ-டு : கூண்டு வண்டி. பறவைக் கூண்டு. எ கிளிக்கூண்டு.

வட்டமான

டு

3. விலங்குகளை அடைத்து வைக்கும் கூண்டு போன்ற அமைப்பு. எ - டு : புலிக்கூண்டு. 4. நீண்டு உருண்டிருக்கும்

5.உருண்டையான புகைக் கூண்டு.

எலிக்கூண்டு.

கூண்டு.

கூடு. ஒ.நோ: பூண்டு - பூடு.

=

"

கூடு 1. வட்டமான நெற்கூடு. ' 'கூடுவிளங்கு வியனகர்” (புறம். 148). 2. வட்டமான அல்லது உருண்ட அல்லது உருண்டு நீண்ட பறவைக் கூடு. 3. விலங்குக் கூடு. "கூடார் புலியும்” (சீவக. 2328). 4. ஆளை அடைத்து வைக்கும் சிறைக்கூண்டு அல்லது அறை. ‘படிக்காச னென்னுமோர் பைங்கிளியைக் கூட்டிலடைத்து வைத்தாய்”