பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

45

(படிக்காசுப் புலவர் தனிப்பாடல்). 5. சான்றியக்கூடு (witness box). 6. முகக்கூடு- முக்காடு. 7. மைப்புட்டி, மைக்கூடு (நெல்லை வழக்கு). 8. படைக்கல வுறை. 9. கருவிக்கூடு. எ-டு : கண்ணாடிக் கூடு. 10. உயிருக்குக் கூடுபோன்ற உடம்பு. “கூட்டைவிட் டுயிர்போவதன் முன்னமே” (தேவா.

376

2).

11.

உள்ளீடற்ற

பதர்.

12. பூச்சிக் கூடு. 13. சதைப்பற்றின்றி நோய்ந்த வுடம்பு. 14. எலும்புக் கூடு. LD. For 1), 5., 5., 51. F1) (gudu).

கூடல்

கூடலி. கூடலித்தல் = வளைதல், கிளர்ந்து வளைதல். "குறுவெயர்ப் புருவங் கூடலிப்ப” (திவ். பெரியாழ். 3 : 6 : 8).

கூடு - கூடாரம் = வண்டிக் கூண்டு. கூடாரவண்டி = கூண்டு வண்டி. கூடாரப்பண்டி (சிலப். 6 : 120. அரும்.).

31:6).

கூடு - கூடை = வட்டமான மூங்கில் முடைவு.

கூள் - கூர். கூர்தல் = வளைதல். "மெய்கூர்ந்த பணியொடு " (கலித்.

குள்- கொள் = வளைந்த காயுள்ள பயற்றுவகை.

'காயுங் கோணக்காய் சொல்லடா மைத்துனா

கதையும் விடுவித்தேன் கொள்ளடா மைத்துனா"

என்பது சிறார் சொல்லும் விடுகதைப் பாட்டு.

குல்- கொல்- கோல். கோலுதல் = 1. வளைத்தல். “நெடுங் காழ்க் கண்டங் கோலி” (முல்லைப். 44). 2. திரட்டி வைத்தல். “கோலாப் பிரச மன்னாட்கு. ” (திருக்கோ. 110).

.

கோல் = 1.உருட்சி. 2. திரட்சி. "கோனிற வளையினார்க்கு” (சீவக. 209). 3. உருண்டு திரண்ட குடைக்காம்பு. "அருள்குடையாக வறங்கோலாக” (பரிபா. 3: 74). 4. துலாக்கோல் (பிங்.). 5. செங்கோல். 6. அளவுகோல் "கோலிடை யுலக மளத்தலின்” (கம்பரா. நகரப். 11). 7. ஊன்றுகோல். 8. கம்பு. "அலைக்கொரு கோறா" (கலித். 82). 9. மரக்கொம்பு (சூடா.). 10. பிரம்பு. 11. யாழ்நரம்பு. “கோல்பொரச் சிவந்த” (சீவக. 459).

ம. கோல், தெ . கோல, க. கோல், து. கோலு. ம.கோல்,தெ

கோல் - கோலி = உருண்ட விளையாட்டுக் கருவி. ம., தெ.கோலி (g), து. கோளி (g), மரா. கோலீ(g). கோல்- கோலை = மிளகு. (தைலவ. தைல. 135).