பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

வேர்ச்சொற் கட்டுரைகள்

கொட்பு = 1. வளைவு. 2. சுழற்சி. "கொட்புறு கலினப் பாய்மா" (கம்பரா. மிதிலை. 13). 3. மனச்சுழற்சி (சீவக. 540, உரை). 4. சுற்றித் (திவா.). 5. நிலையின்மை. "கொட்பின்றி யொல்லும்வா யூன்று நிலை" (குறள். 789).

கொள்- கொட்டு = 1. வட்டமான நெற்கூடு. 2. பிரப்பங் கூடை. ஒ. நோ : வள்- வட்டு.

கொட்டு - கொட்டம் = 1. வட்டமான மாட்டுத் தொழுவம். 2. நூற்குங் கொட்டை (சிறுபாண். 106, உரை). ஒ. நோ 8 வட்டு - வட்டம். கொட்டம் (தொழுவம்)- வ. கோஷ்ட (g, th), தெ. கொட்டமு. கொட்டம் கொட்டாரம் = வட்டமான களஞ்சியம். ஒ. நோ : வட்டம்- வட்டாரம். ம. கொட்டாரம், தெ. கொட்டாரமு, க., து.கொட்டார, மரா. கோட்டார(th), வ. கோஷ்டாகார (th, g).

கொட்டம் கொட்டகை =

சாய்ப்புப் பந்தல். "கொட்டகைத்

தூண்போற் காலிலங்க” (குற்றா. குற. 84:4).

ஒ. நோ: வட்டம் - வட்டகை. க. கொட்டகெ (g), து. கொட்ய. வ.கோஷ்டக (g). ஒ.நோ:ME.; E. cottage.

கொட்டுதல் = கலத்தைச் சாய்த்துக் கவிழ்த்து உள்ளடக்கத்தைச் சிந்துதல் அல்லது சொரிதல்.

=

கொட்டு- கொட்டில் = 1. மாட்டுத் தொழு. “ஏறு கட்டிய கொட்டி லரங்கமே” (தனிப்பாடல்). 2. கொட்டகை, “கொட்டில் விளங்குதேர் புக்கதன்றே” (சீவக. 471). 3. விற்பயிற்றும் இடம். “கல்லூரி நற்கொட்டிலா’ (சீவக. 995). 4. குடிசை. “பன்னூறாயிரம் பாடிக் கொட்டிலும்” (பெருங். உஞ்சைக். 43. 199). ம. கொட்டில்.

கொட்டு - கொட்டை = 1. உருண்ட வடிவம். 2. பஞ்சுச் சுருள். "கொட்டைத் தலைப்பால் கொடுத்து” (திவ். பெரியாழ். 3 : 5 : 1). 3. உருண்ட தலையணை. “நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பி”. 4. உருண்டு திரண்ட விதை. 5. அது போன்ற உறுப்பு (testicle). 6. தாமரைக் கொட்டை. 'தாமரை வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல” (பெருங். உஞ்சைக். 38:258). 7. ஆமணக்கு. 8. பூசணிப் பிஞ்சு. 9. பாதக் குறட்டின் குமிழ். பவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றி" (பெருங். மகத. 22 202). 10. ஆடைத்தும்பு முடிச்சு. 11. “கொட்டைக் கரைய பட்டுடை நல்கி” (பொருந. 155). 12. காது வளர்க்குந் திரி. 13. நூற்குங் கதிர் அடி.

ம. கொட்ட, தெ., க., து. கொட்டெ.