பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல்= (வளைதற் கருத்துவேர்)

49

அயோத்தி. குகப். 9). 3. கொம்பு போன்ற யானை மருப்பு. "யானையின் கொம்பினைப் பறித்து” (திவ். பெரியதி. 4: 2 : 4). 4. கொம்பு போன்ற அல்லது கொம்பினாற் செய்த நீர்வீசு கருவி. “சிவிறியுங் கொம்புஞ் சிதறு விரை நீரும்” (மணிமே. 28 : 10). 5. எழுத்தின் கொம்பு போன்ற வரிவடிவப் பகுதி. “வரைந்திடுந் திறனடைந்த கொம்பு போல” (திருவேங். கலம். 27). 6. கொம்பு போன்ற மரக்கிளை. “வளியெறி கொம்பின் வருந்தி” (மணிமே. 24 : 86). 7. கிளை போன்ற கோல். 8. தலையுச்சிக் கொம்பு போன்றிருக்கும் ஏரிக்கரைக் கோடி.

2019).

ம.கொம்பு, தெ. கொம்மு, க., து.கொம்பு.

6

கொம்பு- கொம்பர் = மரக்கிளை. “நாறுமலர்க் கொம்பர்” (சீவக.

கொம்பு - கம்பு = கோல் (பாண்டிநாட்டு வழக்கு).

கொம்பு- கொம்பன் = 1. கொம்புள்ள விலங்கு. ஒற்றைக் கொம்பன் = பிள்ளையார். 2. சமர்த்தன். உனக்கென்ன கொம்பு முளைத்திருக்கிறதா என்று வினவுவது உலக வழக்கு. இது தலை வேட்டமாடும் நாகர் வழக்கத்தினின்று தோன்றியதாயிருக்கலாம். பண்டை மூவேந்தர் முடியும் கொம்பு வடிவிற் குவிந்திருந்தது கவனிக்கத்தக்கது. 3. மகன், ஆண்பிள்ளை. உனக்கொரு கொம்பன் பிறப்பான் என்பது குடுகுடுப்பாண்டி குறிக்கூற்று. கணவனும் மனைவியும், வன்மை மென்மையாலும் வாழ்க்கைச் சார்பினாலும், கொழு கொம்பும் அதைப் பற்றியேறும் இவர்கொடியும் போலிருத்தலை நோக்குக. கொள்கொம்பு கொழுகொம்பு. 4. அம்மை அல்லது கழிச்சல் நோய்வகை. நீர்க்கொம்பன் = கக்கற் கழிச்சல் (வாந்திபேதி).

கொம்பு- கொப்பு = 1. மரக்கிளை. 2. மகளிர் காதணிவகை. “கொப்பிட்ட வுமைபாகர்” (தண்டலை. சத. 12).

கொள் - கோள் = 1. சுற்றிவரும் விண்மீன். “கோணிலை திரிந்து கோடை நீடினும்” (மணிமே. பதி. 24). 2. ஊர்கோள் வட்டம். “மதியங் கோள்வாய் விசும்பிடை” (சீவக. 1098).

கோள்- கோளம் = 1. உருண்டை. குடவரைக் கோளம் (Western hemi-sphere). குணவரைக் கோளம் (Eastern hemi-sphere). 2. உடம்பில் நீர் சுரக்கும் சுரப்பி (gland), கோளக் கட்டி.

கோளம் - கோளகம் = 1. மண்டல விரியன் (பிங்.). வ. கோலக (g)

2. மிளகு. வ. கோலக.