பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

வேர்ச்சொற் கட்டுரைகள்

கோளம் கோளகை = 1. வட்டவடிவம். 'அண்ட கோளகைப் புறத்ததாய்” (கம்பரா. அகலிகைப். 60). 2. மண்டலிப் பாம்பு (சூடா.). 3. கிம்புரி என்னும் யானைமருப்புப் பூண் (பிங்.).

கோள்- கோளா = 1. உருண்டைக்கறி. 2. கஞ்சாவுருண்டை. கோளாங்கல் = கூழாங்கல் (யாழ்ப்).

கோள்- கோண் = 1. வளைவு. "கோணார் பிறை” (திருவாச. 16 : 5). 2. கோணம். “முக்கோ ணிவர்தரு வட்டம்” (குற்றால. தல. பராசத். 3). 3. மாறுபாடு. 4. கொடுங்கோன்மை.

ரு

கோணுதல் = 1. வளைதல். 2. கோணலாயிருத்தல். 3. நெறி பிறழ்தல். 4. முகங்கோணுதல், மாறுபடுதல். 5. மனங்கோணுதல், வெறுத்தல். "கோணாதே குலவிநுழைந்தனையே” (அருட்பா, 6, திருவடிப் புகழ்ச். 18 7).

கோண் கோணல் = 1. வளைதல் (பிங்.). 2. கூன் (திவா.). 3. மாறுபாடு (சூடா.). ம. கோணல்.

கோண் - கோணம் = 1. வளைவு. (பிங்.). 2. கூன்வாள் (பிங்.). 3. யானைத் துறட்டி. "கோணந் தின்ற வடுவாழ் முகத்த” (மதுரைக். 592). 4. மூலை."கோணமொத் திலங்கோர் முழத்தினின்” (திருவாலவா. 15 : 2). 5. கோணத்திசை. “வடக்கொடு கோணந் தலைசெய்யார்” (ஆசாரக். 31). 6. ஒதுக்குப்புறமான இடம்.

வ. கோண. Gk. gonia (angle).

காணமென்பதே

கோணம் - காணம் = 1. வளைந்த காயிலுள்ள கொட்பயறு (திவா.). கொள்ளைக் பாண்டிநாட்டு வழக்கு. 2. காணப்பயறள வுள்ள நிறை. 3. காணமொத்த வடிவிலுள்ள பொற்காசு. “ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரங் காணமுங் கொடுத்து” (பதிற். 60, பதி.).4. பொன் (திவா.). 5. பொருள். "மேற்காணமின்மையால்” (நாலடி. 372). 6. வரி. “குசக்காணம்”. ம. காணம்.

காணம்* = 1. வட்டமான செக்கு. 2. ஒரு செக்களவு கொண்ட முகத்தலளவை. க. காண(g).

ஓ-ஆ .ஒ . நோ : ஓட்டம்- ஆட்டம் (உவம வுருபு). குரங்காட்டம் ஓடுகிறான் என்பது நெல்லைவழக்கு. ஓடுதல் = ஒத்தல். நோடு- நோட்டம் - நாட்டம் = பார்வை, கண், தேட்டம், விருப்பம், ஆராய்வு. நோடு-நாடு. நாடுதல் = பார்த்தல், கவனித்தல், ஆய்தல், தேடுதல், விரும்புதல். நோடுதல் என்னும் வினைச்சொல் ஆய்ந்து பார்த்தல் என்னும் சிறப்புப் பொருளிழந்து, பார்த்தல் என்னும் பொதுப் பொருளில் இன்று கன்னடத்தில் வழங்குகின்றது.