பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வேர்ச்சொற் கட்டுரைகள்

கோட்டம்- கோட்டை. ஒ.நோ: ஆட்டம்- ஆட்டை.

கோட்டை = 1. வட்டமான நெற்கூடு. “உலவாக் கோட்டை (திருவாலவா. 50 : 13). 2. நெற்கூடு கொள்ளும் 21 மரக்கால் கொண்ட முகத்தல் அளவு. 3. ஒரு நில அளவு. 4. வட்டமான மதிலரண். 5. ஊர்கோள். நிலாக் கோட்டை கட்டியிருக்கிறது (போட்டிருக்கிறது) என்பது இன்றும் உலக வழக்கு.

ம., தெ.,க.,து., கோட்ட. வ. கோட்ட.

கோடு- கோட்டு (பி.வி.). கோட்டுதல் = 1. வளைத்தல். “நகைமுகங் கோட்டி நின்றாள்” (சீவக. 1568). 2. வளைத்து முறித்தல் (திவா.).3. வளைத்து எழுதுதல். “தன்னாம மேருவினுங் கோட்டி னானே” (பாரத. சிறப்புப். 19). 4. வளைத்துக் கட்டுதல். “ஒரு மண்டபங் கோட்டினேன்” (பாரத. வாரணா. 123).

கோடு- கோடகம் கேடகம்

வட்டமான பரிசை. "கேடகம்

ஒளிவீச” (கம்பரா. கடிமணப். 33). கேடகம் - வ. கேட்டக்க (khetaka). ஒ . நோ : புரி - பரி- பரிசை = வட்டமான கேடகம். புரிதல் = வளைதல். கேடகம்- கிடுகு = 1. கேடகம். "வார்மயிர்க் கிடுகொடு” (சீவக. 2218). 2. தேர்மரச்சுற்று (ஞானா. 7 : 16). 3. வட்டவடிவான பறைவகை. "கிடுகு கொட்டின" (பாரத. அணி. 15). வ. கிடுக (g-g).

கோடு - கோடரம் = 1. மரக்கிளை (பிங்.). 1. குரங்கு. "கொய்தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத் துருவு கொண்டு" (கம்பரா. அட்சகுமா. 4). "கோடுவாழ் குரங்கும்” என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. (தொல். மரபு. 13). க. கோடக (g).

கோடம்- கோரம் = வட்டில். “அமுதுடைக் கோர நீக்கி” (கம்பரா. அயோத்தி. மந்திரப். 25).

=

கோடு - கோசு. கோசுவிழுதல் = துணிவெட்டும்போது கோணிப் போதல்.

கிளைக் கருத்துகள்

1. திரட்சி. கோல் = திரண்ட கம்பு. கோல் - கால் = மரத்தூண், கற்றூண். நாற்காற் பந்தல் என்பதில் மரத்தூணும், நூற்றுக்கால் மண்டபம் என்பதிற் கற்றூணும் குறிக்கப்படுதல் காண்க. உருட்சிக் கருத்தினின்றும் திரட்சிக் கருத்துத் தோன்றிற்று. பின்வருபவை வளைவு அல்லது திரிபு என்பதை அடிமணையாகக் கொண்டவை.

2.தீமை.எ-டு : கொடுவினை = தீவினை.