பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல்" (எரிதற் கருத்துவேர்)

65

(செ. குன்றாவி.) = 1. சுடுதல். 2. வெகுள்தல். "காந்தி மலைக் குத்து மால்யானை” (திருவள். 11).

ம.காந்து.

காந்து - காந்தல் = 1. எரிகை. 2. எரிந்த கருகல். 3. காய்ந்த பயிர். (W.). 4. சினம் (W.).

காந்தல்- காந்தள் = 1. செங்கோடல். "கடிசுனைக் கவினிய காந்தள்” (கலித். 45). 2. காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடு வதைக் கூறும் புறத்துறை (தொல். பொருள். 60). 2. முருகனுக்குரிய காந்தள் மலரைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு. வெ. 6 : 9).

ம.காந்தள்.

சிறப்புப்பொருள் மறைந்தபின் செங்காந்தள் எனப்பட்டது.

ஒ.நோ : தாமரை (செம்முண்டகம், முண்டகம்). செந்தாமரை. காந்து– காந்தி = 1. வெம்மை (மூ. அ.). 2. கதிர்(W.). 3.ஒளி (சூடா.). 4. அழகு (பிங்.). 5. காவிக்கல்(W.).

காந்தி - வ. காந்தி (kanti).

காந்து- காந்தாளம் = சினம் (W.).

காந்தாளம் - காந்தாளிகம் = சின்னி (மலை).

காந்து- காந்துகம் = காந்தள்.

L. cand, shine, be white. L. candela, cylinder of Spernaceti enclosing

with, for giving light. OE. candel, E. candle.

L. candescere - E. candescent = glowing with white heat.

L. candidus, white - E. candide - E. candid = frank.

L. candor. E. candour = open-mindedness.

L. candidatus - E. candidate = Roman aspirant who was white - robbed when canvassing votes.

Skt. chand, shine, chandra - noon that which shines.

காய் - காய்ங்கு - காங்கு - காங்கை = வெப்பம்.

க.காங்கெ,தெ. காக்க (kaka).

காங்கு- கங்கு = கழல் துண்டு.

குள்- குண்- குண்பு - கும்பு. ஒ. நோ : சண்பு - சம்பு, கொண்பு- கொம்பு.

கும்புதல் = சமைக்கும் உணவு தீய்ந்து போதல்.