பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல் (துளைத்தற் கருத்துவேர்)

71

(புறம். 6:12). 7. முழுகினாற்போல் மறைதல். “யானறித லஞ்சிக் குளித்து” (கலித். 98). 8. தோல்வியுற்று மறைதல், தோல்வியுறுதல். “மீன்குளிக்குங் கற்பின்” (சீவக. 2141).

ம்.குளி.

குளி - குழி = 1. பள்ளம் (திவா.). 2. பாத்தி. “இன்சொற் குழியின்” (நான்மணி.16). 3. நீர்நிலை (பிங்.). 4. கிணறு (திவா.). 5. வயிறு (அக. நி.). 6. கனவடி. 7. ஒரு நிலவளவு.

=

,

=

குழி - ம.குழி, க. குழி, தெ. கொய்யி (g), மராத். குடி (kh). குழிதல் உட்குழிவாதல். “குழிந்தாழ்ந்த கண்ணவாய்” (நாலடி. 49). குழித்தல் = 1. குழியாக்குதல். “குழித்துழி நிற்பது நீர்” (நான்மணி. 30). 2. செதுக்குதல். குழித்த மோதிரம் (கலித். 84, உரை). 3. குழித் தெழுதுதல். க. குழி.

=

‘கும்பக் குழிய’ என்பது உலக வழக்கிணை மொழி. குழி- குழியல் குழிந்த மாழைக்கலம்.

குழிதாழி = குழிந்த பெருந்தொட்டி. ம. குழித்தாழி. குழிசி பெரும்பானை. “சோறடு குழிசி” (பெரும்பாண். 366). குழிமி = மதகு.

=

குழிவு - குழிவல் - கூவல் = கிணறு. “கூவ லன்ன விடரகம்” (மலைபடு.366). கூவல்- வ. கூப.

குழிப்பு - குழிப்பம் - கொப்பம் = யானை பிடிக்க வெட்டும் பெருங்குழி. “கைம்மலைசெல் கொப்பத்து வீழ” (குமர. பிர. மீனாட். பிள்ளை. 11).

குழி - குழிம்பு - குழும்பு = குழி. “ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர” (மதுரைக். 273). ம. கொப்பம்.

குழல் = 1. உட்டுளை. “குழற்கா லரவிந்தங் கூம்ப” (தமிழ்நா. 63). 2. உட்டுளைப் பொருள் (திவா.). 3. இசைக்குழல் (சூடா.).

ம. குழல், க. கொழல்.

குழல்- குடல் = குழல்போன்ற உட்டுளையுள்ள உறுப்பு.

ம. குடல். குடல் - குடர். ம. குடர். “குடருங் கொழுவும்” (நாலடி. 46). ஒ.நோ: புழல்- புடல்.

6

குழி - குழை = 1. துளை. “கோடிநுண் டுகிலுங் குழையும் ’” (சீவக. 1369). 2. குழல் (பிங்.). 3. காது. "மணித்தோடுங் குழையிலாட” (அஷ்டப். சீரங்க நாயகி ஊச. 3).