பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

குல்' (துளைத்தற் கருத்துவேர்)

கொல்லம்

என்னும் நகரங்களைக் கொண்டதும்

73

ஏரிகள்

மிகுதியாகவுள்ளதுமான பழைய கொடுந்தமிழ் நாடு. "குட்டநாட்டுத் திருப்புலியூர்” (திவ். திருவாய். 8:9:1).

குட்டு - குட்டை = சிறுகுளம்.

குல்- கில். கில்லுதல் = தோண்டுதல். கில்- கீல். கீலுதல் = கிழித்தல் (சூடா.). க. கீல், தெ. சீலு (c). கீன்றல் = கீறுகை (திவா.).

கில் கெல். கெல்லுதல்

-

(தனிப்பா. 11, 140, 356).

கில் - கிள்

6

=

தோண்டுதல். 'கிணறு கெல்ல"

கிளறு. கிளறுதல் = 1. கிண்டுதல் "ஏனமோ

டன்னமாய்க் கிளறியும் பறந்தும்” (தேவா. 101 : 9). 2. துழாவுதல். 3. துருவியாராய்தல். 4. பழையதை நினைப்பூட்டுதல்.

க. கௌர், தெ. கெலகு.

கிள்- கிளை. கிளைத்தல் = 1. கிளறுதல். “கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின்” (புறம். 176 : 2). 2. அடிமரம் கிளறப் பட்டதுபோற் கப்பு விடுதல். ம. கிளு.

கிளை = கவை, பிரிவு, சுற்றம், இனம். கிளைஞர் = உறவினர். கிள்- கிண்- கிணம் = கிணறு.

கிண் - கிண்ணம் = 1. சிறுவட்டில். “மழக்கை யிலங்குபொற் கிண்ண மென்றலால்” (திருவாசக. 5: 92). 2. நாழிகை வட்டில் (பிங்.).

கிண்- கிண்ணி = கிண்ணம்.

கிண் - கிணறு. “உவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்” (நாலடி. 263).ம.கிணறு.

கிண்- (கெண்)- கேணி = 1. கிணறு (திவா.). 2. சிறு குளம். (தொல். சொல். 400, உரை). 3. அகழி (திவா.). ம. க. கேணி, து. கணி (அகழி).

و

கிள்- கிண்டு. கிண்டுதல் = 1. கிளறுதல் (பிங்.). 2. தோண்டுதல். 3. ஆராய்தல். ம. கிண்டு. கிண்டு - கிண்டல் = 1. கிளறல். 2. தோண்டல். 3. தூண்டல். 4. பகடிபண்ணல்.

கிண்டு- கெண்டு. கெண்டுதல் = 1. கிண்டுதல். 'வண்டு கெண்டி மருவும் பொழில்” (தேவா. 626 : 10), 2. தோண்டுதல். “கவலை கெண்டிய கல்வாய்” (குறுந். 233). 3. அறுத்துத் தின்னுதல். "மன்றத்து மதவிடை கெண்டி” (பெரும்பாண். 143). தெ. செண்டு (c).

கிள்- கிழி. கிழித்தல் = 1. கீறுதல். 2. பீறுதல். "தரியினங்கடம் மெயிற்றினாற் சிதையக் கிழித்த பேரிறால்” (கந்தபு. ஆற்று. 23).