பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

சுல்' (குத்தற் கருத்துவேர்)

சுல் - சூல் = 1. குத்தும் கூரிய படைக்கலம், 2. முக்கவர் வேல்.

"குலிசங் கதைசூல்” (சேதுபு. தேவிபுர. 27).

சூல் - சூலம் = 1. முக்கவர் வேல். “ஊனக மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9: 17). 2. இடிதாங்கி. "ஒள்ளிலைச் சூல..... மாடம்" (சீவக. 2527). 3. சூலவேல் வடிவில் மாட்டிற்கு இடும் சூட்டுக்குறி. 4. கிழமைச்சூலை, 5. தோணி (இரேவதி) நாள் (பிங்.). 6. குத்தலுங் குடைச்சலுமுள்ள பல்வகைச் சூலைநோய். 7. கூரிய முனையுள்ள கழு(W.) சூலம் - சூல (வ.).

சூலம் வேல்வகைகளுள் ஒன்றென்பது ‘உருகெழு சூலவேல் திரித்து” (சங். அக.) என்னும் தொடரால் அறியப்படும். வேலைப்போல மூன்று வழி” (சிலப். 11 : 73, உரை).

"சூல்

வேல் முருகனது சிறப்புப் படைக்கலமாகக் கொள்ளப்பட்டது போல், சூலவேல் சிவனது சிறப்புப் படைக்கலமாகக் கொள்ளப் பட்டதனால், சிவன் கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல் சூலக்கல் என்றும், சூலக்குறி பொறிக்கப்பெற்ற சிவன்கோயில் அளவை மரக்கால் சூலக்கால் என்றும், சூலக்குறி யிடப்பெற்ற சக்கரமுள்ள சிவன் கோவில் வண்டி சூலக்கால் வண்டியென்றும், சிவன் கோவிற்காகச் சூலவடிவிற் சூலவடிவிற் சூடிட்டு விடப்பெற்ற காளை சூலக்காளை யென்றும், பெயர்பெறும்.

சிவநெறி தமிழர் சமயமேயென்பதும், ஆரியர்க்குச் சிறுதெய்வ வேள்வியன்றி வேறு மதமில்லையென்பதும், என் 'தமிழர் மதம்' என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.

சிவபிரானது சூலம் குறுக்கே நிற்பதால், இன்னின்ன திசை இன்னின்ன கிழமையில் வழிப்போக்கிற்கு ஆகாதென்று விலக்கப் பட்ட கிழமைக்குற்றம், கிழமைச்சூலம் எனப்படும். அஃது இன்று ‘வாரசூலை’