பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வேர்ச்சொற் கட்டுரைகள்

த்த

முடிபோட்டுக் காட்டுவதற்குத் தமிழரின் பேதைமையும் பேடிமையுமே முழுக்கரணியமாகும்.

சுரணை மரணை என்னும் இணைமொழியிலுள்ள இரண்டாம் சொல்லே வடசொல்லாகும். அஃது ஒலியொப்புமையும் இற்றைத் தமிழரின் மொழியுணர்ச்சி யின்மையும்பற்றி இணைந்ததென அறிக.

சுர் - சுரு - சுறு - சுறுக்கு. சுறுக்கெனல் = 1. குத்துதற் குறிப்பு. சுறுக்குச் சுறுக்கென்று குத்துகிறது என்பது உலக வழக்கு. 2. பாம்பு கடித்தல். “பாந்தள் சீறிச் சுறுக்கெனவே கடிக்க” (சிவரக. அபுத்திபூ. 13). 3. தேட்கொட்டுதல்.

5. சுருக்கென. சுறுசுறெனல் = பன்முறை முட்குத்துதல்.

க. சுறுசுறெனெ. சுறு- சுறீர், சுறீரெனல். “எறும்பு சுறீரென்று கடித்து விட்டது” (உ. வ.) க. சுரீரெனெ.

சுறு - சுறுக்கு = 1. கூர்மை. 2. விரைவு. “சுறுக்காய் வா” (உ.வ.). 3. சுறுசுறுப்பு. 4. கடுமை. 5. காரம். 6. விலையேற்றம், 7. கேட்பு (Demand) மிகுதி. ம., க. சுறுக்கு, தெ., து. சுறுக்கு. சுறு- சுறுசுறு- சுறுசுறுப்பு = 1. விரைவு. 2. ஊக்கம். ம. சுறுசுறுப்பு. தெ. த்சுரத்சுர.

சுறு - சுறுதி = விரைவு.

சுறு - சுறா = கத்திபோல் வெட்டும் செதிலுள்ள கடல்மீன். சுறவ ஓரை (Capricorn of the Zodiac).

203).

ம. சுறா, க. சொற, தெ. த்சொர.

சுறா- சுற (shark). சுறவழங்கும் இரும்பௌவத்து' (பொருந.

சுற = சுறவு (shark). “சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப” (புறம். 13: 7).

சுறவுவாய் = ஒரு மகளிர் தலையணி. “சுறவுவா யமைத்த" (பெரும்பாண். 385).

சுறவு- சுறவம் (shark) "எயிற்றிறப் பாய்ந்தது சுறவம் " (திருவிளை. வலைவீசி. 37).

சுறாளம் = 1. விரைவு. 2. சினம். சுறவை = கடுமை. சுறு- சுறண்டு. சுறண்டுதல் = 1. உகிராற் பறண்டுதல். 2. கூரிய கருவியாற் களைபறித்தல். களைசுறண்டி = களை வறண்டி. 3. உடம்பைச் சுறண்டி ஒன்றைக் குறிப்பிடுதல். 4. சமையற் கலங்களிலுள்ள பற்று வழித்தல். 5. பிறன்பொருளைக் கவர்தல். “என் சொத்தையெல்லாம் சுறண்டி விட்டான்” (உ. வ.). 6. கற்பழிக்க ஒரு பெண்ணைத் தொடுதல்.