பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

சுல்' (சுடுதற் கருத்து வேர்)

சுல் - சுல்லி = 1. அடுப்பு (திவா.). “சுல்லியுர லுலக்கை ” (சைவச. பொது. 266). 2. மடைப்பள்ளி (இலக். அக.). சுல்லி - வ. சுல்லீ(c).

சுல்

சுள். சுள்ளெனல்

=

கடுமையாகச் சுடுதல், காய்தல். ‘சுள்ளென்று வெயிலடிக்கிறது' என்பது உலக வழக்கு. சுள் = வெயிலிற் காய்ந்த கருவாடு என்னும் மீன்வற்றல். “சுள்ளினைக் கறித்தனர்” (கந்தபு. அசமுகிநகர். 18). சுள்- வ. சுஷ்.

சுள்ளாப்பு = கடுவெயில்.

சுள்ளி = வெயிலிற் காய்ந்த சிறு கொம்பு (மரக்கிளை).

சுள் - சுள்ளை சுள்ளை = 1. மட்கலஞ்சுடும் சூளை (தொல்.சொல். 449, உரை). 2. செங்கல் சுடும் காளவாய்.

சுள்ளை- சூளை = 1. செங்கல் சுடும் காளவாய். “அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை” (புறம். 228 : 3). 2. ஈமவிறகு. சூளை- ம. சூள.

சுள்- சுளுந்து = 1. சுள்ளியாலான தீப்பந்தம், தீப்பந்தம்.

சுள் - சுடு.சுடுதல் = 1. பொசுக்குதல் : "வெம்பிச் சுடினும் புறஞ் சுடும்” (நாலடி. 89). 2. காய்ச்சுதல். “சுடச்சுடரும் பொன்போல்” (குறள். 267). 3. எரித்தல். 4. பலகாரஞ் சுடுதல். “பிட்டுச் சுட்டுக் கொடுத்தனள்” (திருவாலவா. 30 : 20). 5. சுள்ளியில் வேகவைத்தல். 6. நீற்றுதல்.7. சூடிடுதல். 8. வெடிசுடுதல். 9. நெருப்பில் வாட்டுதல். “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” (மூதுரை, 4). 10. வருத்துதல். துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு” (குறள். 267). 11. கெடுத்தல். 'குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின்”(குறள். 1019). “நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல்” (தனிப்பாடல்).

ம., க., து. சுடு.