96
வேர்ச்சொற் கட்டுரைகள்
புரிகுழல்
= கடை குழன்று சுருண்ட கூந்தல். "புரிகுழன் மாதர்” (சிலப். 14:37).
புரிசடை = சுருண்ட சடை (W.).
புரிநூல் = முறுக்கிய பூணூல். “திருமார்பினிற் புரிநூலும்” (தேவா.
385:3).
புரிமணை = வைக்கோற்புரி வளையம்.
புரிமுகம் = 1. சங்கு. 2. நத்தை.
சங்குக் கூடும் நத்தைக் கூடும் உள் வளைவுள்ளன.
புரிமுறுக்கு = முறுக்கு வளையல்.
இடம்புரி = இடப்புறமாக வளைந்த சங்கு.
=
கொடும்புரி = மிக ஏறிய முறுக்கு.
முப்புரி = முறுக்கிய முந்நூல் (பூணூல்).
வலம்புரி = வலப்புறமாக வளைந்த சங்கு.
வைக்கோற்புரி = முறுக்கிய வைக்கோற் கயிறு.
புரி - புரிவு
=
1. தப்பி நீங்குகை. "புரிவின்றி..... போற்றுவ போற்றி” (பு. வெ. 8 :20). 2. தவறு. “புரிவிலா மொழிவிதுரன்” (பாரத. சூது. 43). 3. வேறுபடுகை (அக. நி.).
புரி - புரிசை = நகரைச் சூழ்ந்த மதில்.
“ஏந்துகொடி யிறைப்புரிசை” (புறம். 17).
புரி- பரி. பரிதல் = 1. (வளைந்து) முறிதல், "வெண்குடைகால்பரிந் துலறவும்” (புறம். 229). 2. அறுதல். “பரிந்த மாலை” (சீவக. 1349). 3. அழிதல். “பழவினை பரியுமன்றே” (சீவக. 1429). 4. பிரிதல் (W.).
பரித்தல் = சூழ்தல். “குருதி பரிப்ப” (அகம். 31). 2. அறுத்தல் (அக. 7.).
க.பரி.பரி -வ.பரி.
"Pari, ind. round, around, about, round about; fully, abundantly, richly (esp.) ibc. (where also pari) to express fullness (or high degree), R.V. & c. & c. as a prep. (with acc.) about (in space and time), R.V., A.V., against opposite to, in the direction of, towards, to, ib. (of. Pam. i, 4, 90; also at the beginning of a comp. mfn. cf. ib. ii, 2, 18, Vartt. 4 Fat. and Pary - adhyayana), beyond, more than, A.V., to the share of (with as or bhu, to fall to a person's lot.), Pam