98
வேர்ச்சொற் கட்டுரைகள்
பரிதி காந்தம் = ஒருவகைக் கன்மணி (jasper), "பரிதி காந்தமென் றுரைத்திடு பன்னொரு சிகரத்து” (உபதேசகா. கைலை. 24).
பரிதிபாகை = வானநூ லளவைவகை (W.).
பரிதி வட்டம் = கதிரவன் மண்டலம்.
"வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோல் விளங்கு வாரே” (திவ். பெரியதி. 4: 5 : 10).
புர்- புரு - புருவு - புருவம் = 1. கண்களின் மேலுள்ள மயிர் வளைவு. “கொடும்புருவங் கோடா மறைப்பின்” (குறள். 1086). 2. புண்விளிம்பு (W.). 3. செய்வரப்பு(W.).
புருவம் - வ. ப்ருவ (bhruva).
Cf. E. brow = arch of hair over eye, OE. bru, ON. brur, eyebrow.
புரு- புருள்- புருளை- புருடை = முறுக்காணி.
ஒ.நோ : உருள் - உருளை- உருடை - ரோதை - L. rota, wheel.
புருடை- பிருடை = 1. முறுக்காணி(W.). 2. புட்டியடைக்குந் தக்கை. 3. சுழலாணி (சங். அக.).
தெ. பிரட (b), க. பிரடெ (d).
பிருடை- பிரடை = 1. முறுக்காணி(W.). 2. முறுக்காணி வில்லை. தெ. பிரட, க. பிரடெ.
புல்- புள்- பள்- பண்டு- பண்டி = 1. சக்கரம். 2. வண்டி “செந்நெற் பகரும் பண்டியும்” (சீவக. 61). 3. சகட நாண்மீன் (சூடா.).
தெ., க. பண்டி.
=
பண்டி - பாண்டி = 1. கூடாரப் பண்டி (சிலப். 14 : 168, அரும்.). 2. மாட்டுவண்டி. “அகவரும் பாண்டியும்” (பரிபா. 10 : 16). 3. வட்டமான வட்டு அல்லது சில். 4. நிலத்திற் கீறிய கட்டங்களில் வட்டெறிந்து நொண்டி விளையாடும் (பாண்டிநாட்டு) விளையாட்டு. 5. காளைஅல்லது எருது (பரிபா. 20:17, குறிப்பு).
பாண்டி- பாண்டில் = 1. வட்டம் (திவா.). “பொலம்பசும் பாண்டிற் காசு” (ஐங். 310). 2. தேர்வட்டை (சிலப். 14 : 168, உரை). 3. இரு சக்கர வண்டி, “வையமும் பாண்டிலும்” (சிலப். 14 : 168). 4. குதிரை பூட்டிய தேர் (திவா.). "பருந்துபடப் பாண்டிலொடு பொருத பல்பிணர்த்